7 பிரிவுகளில் நாமினேட்டான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ – விருது விழாவையே புறக்கணித்த இயக்குனர். அவரே போட்ட பதிவு.

0
219
Thekashmirfiles
- Advertisement -

ஏழு பிரிவுகளில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு விருது பரிந்துரைக்கப்பட்டதற்கு இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி புறக்கணித்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 68வது பிலிம்பேர் விருதுகள் மும்பையில் உள்ள ஜியோ சர்வதேச மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்க இருக்கிறார். அவருடன் இணைந்து ஆயுஷ்மான் குரானா மற்றும் மனீஷ் பால் இருவரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இதில் ஆலியா பட்டின் ‘கங்குபாய் கத்தியவாடி’, விவேக் அக்னிஹோத்ரியின் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, ரன்பீர் கபூரின் ‘பிரம்மாஸ்திரா’ உட்படப் பல பிரிவுகளில் விருதுகள் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக, தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிகர் உட்பட ஏழு பிரிவுகளில் விருந்து பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இந்த ஃபிலிம்பேர் விருதில் பங்கேற்க மறுத்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

விவேக் அக்னிஹோத்ரி டீவ்ட்:

அதாவது, இந்த விருது வழங்கும் விழாவில் விவேக் அக்னிஹோத்ரி கலந்து கொள்ள மறுத்திருக்கிறார். மேலும் இது குறித்து அவர் டீவ்ட் ஒன்றும் போட்டு இருக்கிறார். அதில், தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் 7 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் அறிந்தேன். ஆனால், இந்த நியாயமற்ற சினிமாவிற்கு எதிரான இந்த விருது விழாவில் பங்கேற்க மறுக்கிறேன். காரணம், முக்கியமான நட்சத்திரங்களைத் தவிர வேறு யாருக்கும் உரிய அங்கீகாரத்தை இந்த விருதுகள் வழங்குவதில்லை.

விருது விழா குறித்து சொன்னது:

இந்த பிலிம்பேர் விருதில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சஞ்சய் லீலா பன்சாலி, சூரஜ் பர்ஜாத்யா போன்ற திறமை வாய்ந்த இயக்குநர்களின் புகைப்படங்கள் எங்கும் இடம்பெறவில்லை. சஞ்சய் லீலா பன்சாலி, ஆலியா பட் போலவும், சூரஜ், மிஸ்டர் பச்சனைப் போலவும், அன்னேஸ் பாஸ்மி, கார்த்திக் ஆர்யனைப் போலவும் தோற்றமளிக்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும். அதனால்தான் இந்த ஊழல் நிறைந்த நியாயமற்ற விருதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த விருதுகளை ஏற்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்.

-விளம்பரம்-

விருதை மறுக்க காரணம்:

ஒரு திரைப்படத்தின் திறமை வாய்ந்த எழுத்தாளர்கள், இயக்குநர்கள் மற்றும் படக்குழு உறுப்பினர்களை அடிமைகளாக நடத்தும் விருதுகளின் ஒரு பகுதியாக இருக்க நான் மறுக்கிறேன். இந்த விருதில் வெற்றி பெறுபவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். வெற்றி பெறாதவர்களுக்கு அதைவிட என்னுடைய சிறந்த வாழ்த்துகள் என்று கூறி இருக்கிறார். தற்போது இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரியின் டீவ்ட் பாலிவுட் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் 11 மார்ச் 2022 ஆம் ஆண்டு வெளியான இந்தி மொழி திரைப்படம் தான் தி காஷ்மீர் ஃபைல்ஸ். இந்த படத்தை ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்தது. இந்தத் திரைப்படம் காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரி இந்துக்கள் காஷ்மீரத்தை விட்டு வெளியேறியதை அடிப்படையாகக் கொண்டது. இந்த படத்தில் மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கெர், தர்ஷன் குமார், பல்லவி ஜோஷி, சின்மயி மண்டலேகர், பிரகாஷ் பெலவாடி மற்றும் புனித் இஸ்ஸார் ஆகியோர் நடித்து இருக்கின்றனர். மேலும், இந்த படம் குறைந்த பட்ஜெட்டில் எடுத்து அதிக வசூல் சாதனைகளை செய்தது.

Advertisement