இவங்க ரெண்டு பேரு தான் கலாச்சாரத்த அப்படி பண்ணது – காஸ்மீர் பைல்ஸ் இயக்குனர் விலாசல்

0
1334
Vivek Agnihotri
- Advertisement -

ஷாருக்கான், கரண் ஜோஹர் இருவரும் இந்திய கலாச்சாரத்தை சேதப்படுத்துகிறார்கள் என்று இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்திய சினிமாவில் மிக பிரபலமான இயக்குனராக இருப்பவர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி. இவர் திரைப்பட இயக்குனர் மட்டும் இல்லாமல் திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர், சமூக ஆர்வலர் போன்ற பன்முகங்களை கொண்டவர்.

-விளம்பரம்-

இவர் சாக்லேட் என்ற படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமாகியிருந்தார். அதன் பின் இவர் பல படங்களை இயக்கி, தயாரித்தும் இருக்கிறார். குறிப்பாக இவர் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த தி தாஷ்கண்ட் ஃபைல்ஸ் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு தேசிய விருதும் கிடைத்திருந்தது. அதன் பின் 2012 ஆம் ஆண்டு இவர் இயக்கிய ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

- Advertisement -

விவேக் அக்னிஹோத்ரி திரைப்பயணம்:

இந்த படம் இந்தியா முழுவதும் பரவலாக பேசப்பட்டது. இதனை அடுத்து தற்போது இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் வேக்சின் வார். இந்த படம் செப்டம்பர் 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதனை அடுத்து டெல்லி ஃபைல்ஸ் என்ற படத்தை இவர் இயக்க இருக்கிறார். இப்படி இவர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இருக்கிறார்.

விவேக் அக்னிஹோத்ரி இயக்கும் படம்:

குறிப்பாக. இவர் சர்ச்சையான கருத்துக்களை சோசியல் மீடியாவில் பதிவிடுவதை வழக்கமாகவே வைத்திருக்கிறார். இதனால் பல சர்ச்சைகளில் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி சிக்கி இருக்கிறார். இந்த நிலையில் ஷாருக்கான்- கரண் ஜோஹரை விமர்சித்து அக்னிஹோத்ரி பேசி இருக்கும் கருத்து தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்து இருந்தார்.

-விளம்பரம்-

விவேக் அக்னிஹோத்ரி அளித்த பேட்டி:

அதில் அவர், நான் இந்தியா முழுக்க பயணம் செய்தபோது உண்மையான இந்தியாவை பார்த்தேன். யாரும் சொல்லாத ஏராளமான கதைகளை நான் கேட்டேன். அவை என்னுடைய சித்தாந்தங்களையும், சினிமாக்கான அணுகுமுறையும் மாற்றிவிட்டது. மேலும், சூப்பர் ஸ்டார் ஆன அமிதாப்பச்சனுக்கு பிறகு சினிமாவில் உண்மையான கதைகள் சொல்லப்படவில்லை.

ஷாருக்கான் மற்றும் கரண் ஜோஹர் குறித்து சொன்னது:

குறிப்பாக கரண் ஜோஹர் மற்றும் ஷாருக்கான் போன்றவர்களின் திரைப்படங்கள் இந்திய கலாச்சாரத்தை சேதப்படுத்தி இருக்கிறது. அதனால் தான் நான் உண்மை கதைகளை சொல்வதை முக்கியம் என உணர்ந்து செய்து கொண்டிருக்கிறேன் என்று பேசுகிறார். இப்படி இவர் பேசியிருப்பது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து ஷாருக்கான் மற்றும் கரண் ஜோஹர் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement