இந்த முறை விஜய் டிவியில் இல்லையா ? கமல் இல்லையா ? பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வெளியான பிக் பாஸ் சீசன் 7 ப்ரோமோ.

0
1646
BiggBoss
- Advertisement -

பிக் பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் டி.விகளில் ஒளிபதிவாகும் நிகழ்சிகளில் மிகவும் புகழ் பெற்ற நிகழ்ச்சிகளுள் ஒன்று தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இது ஆரம்பம் முதல் நல்ல வரவேற்ப்பை பெற்றதால் தற்போது சீசன் 7 வரை வந்துள்ளது. இந்நிகழ்ச்சிக்கு மற்றொரு பலம் என்றால் உலக நாயகன் கமல்ஹாசன் தான். இவர் தான் இந்த நிகழ்ச்சிற்கு தொகுப்பாளராக இருந்து வருகிறார். இந்நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்களை தேர்ந்து எடுப்பதற்க்கான வேலைகளும் நடந்துகொண்டு உள்ளது என தகவல்கள் வெளியாகின.

-விளம்பரம்-

இந்நிகழ்ச்சியில் சோஷியல் மீடியாவில் புகழ்கள், விஜய் டி.வியில் உள்ளவர்கள், ஒரு காலத்தில் புகழ் பெற்ற நடிகைகள், பாடலாசிரியர்கள், மாடல்கள், நாட்டுபுற கலைஞர்கள் போன்றவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்குபெறுவார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்து வெற்றி பெரும் நபர்களுக்கு சிறந்த வரவேற்ப்பு கிடைக்கும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. அதுமட்டுமல்லாமல் கடந்த சீனில் வெற்றி பெற்ற அசீமிற்கு 50 லட்சம் ருபாய் கிடைத்தது.

- Advertisement -

முதல் ப்ரோமோ :

பிக்பாஸ் சீசன் 7க்கான ப்ரோமோ இம்மாத இறுதிக்குள் வெளியாக கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமீபத்தில் இந்த சீஸனின் முதல் அதிகாரப்பூர்வ ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இந்த சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகாது, கமல் இந்த சீசனில் பங்கேற்க மாட்டார் என்று பல்வேறு விதமாக வதந்திகள் பரவிய நிலையில் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த ப்ரோமோ அமைந்துள்ளது.

மேலும், பிக்பாஸ் சீசன் 7 குறித்து சில முக்கியமான தகவல்கள் கசிய தொடங்கின. அது என்னவென்றால் வரும் பிக்பாஸ் சீசன் 7-ல் இரண்டு வீடுகள் பயன்படுத்தப்படும் என்பது தான். இரண்டு வீடுகளிலும் போட்டியாளர்களை பிரித்து தங்க வைக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் புதிய வீட்டில் புதிய போட்டியாளர்களையும் பழைய வீட்டில் பழைய போட்டியாளர்களை தங்க வைக்க கூடும் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

-விளம்பரம்-

இரண்டு வீடா ? :

இந்த இரண்டு வீடு கான்சப்ட் ஏற்க்கனவே வெளியான பிறமொழி பிக் பாஸில் உள்ளது என்றும் தமிழில் முதல் முறையாக முயற்ச்சிக்க படுவதாகவும் சொல்கிறார்கள். அதே நேரம் இரண்டு வீடு கான்செப்ட் போட்டியாளர்களிடம் முன் கூட்டியே அறிவிக்கப்படுமா? அல்லது பங்கேற்று சில நாட்களுக்கு பிறகு இரண்டு வீடுகளையும் ஒன்றாக்கி அந்த விஷயத்தை கூறுவார்களா என்பது கூறித்து இன்னும் முடிவாகவில்லை எனவும் தகவல்கள் வெளியாகின.   

போட்டியாளர்கள் யார் ? :

இந்த சீசன் இரண்டு வீடுகள் இருப்பதால் போட்டியாளர்கள் அதிகமாக்க படுமா என்ற கேள்விக்கு இல்லை அதே அளவில் தான் போட்டியாளர்கள் பங்குபெருவர்கள் எனவும் அவர்களை தனி தனியே பிரித்து தங்கவைக்கப் படலம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. மேலும், இந்த முறை போட்டியாளர்களாக விஜய் டிவிக்கு நெருக்கமானவர்கள், சோஷியல் மீடியாவில் வைரலானவர்கள், ஒருகாலத்தில் பரபரப்பாக இருந்து இன்று ஒதுங்கியிருக்கும் சீனியர் நடிகைகள், மாடல்கள், வெளிநாடுவாழ் தமிழர்கள் என்று கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Advertisement