உத்தமபுத்திரன் படத்துல அவரே அப்படி கூப்புட சொன்னாரு – விவேக் மறைவு குறித்து போக்கிரி பட பையன் வெளியிட்ட வீடியோ (இப்போ இவர் ஹீரோ)

0
27086
pappu

சனங்களின் கலைஞனாக இருந்த சின்னக் கலைவானர விவேக் கடந்தமூன்று தினங்களுக்கு முன் (ஏப்ரல் 17) காலமான சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் நடிகர் விவேக். நகைச்சுவையின் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விவேக்.நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் விவேக் லட்ச கணக்கான மரங்களை நட்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 16) நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பின்னர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. விவேக்கின் மறைவில் இருந்து மீள முடியாமல் பலர் இருந்து வரும் நிலையில் விவேக்குடன் உத்தமபுத்திரன் படத்தில் நடித்த மாஸ்டர் பப்பு உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் பாருங்க : எப்பா, இந்த அர்ச்சனா வேனவே வேணாம். இவங்கள ஆங்கரா போடுங்க – புலம்பும் ரசிகர்கள். (இவங்களும் ரொம்ப நாளா கேட்டுட்டு தான் இருக்காங்க)

- Advertisement -

2002 ஆம் ஆண்டு பஞ்சதந்திரம் படத்தின் மூலம் பிரபலமானாவர் மாஸ்டர் பரத். இவர் தெலுங்கு மற்றும் தமிழில் பிரபலமான காமெடி நடிகர்தான். பஞ்சதந்திரம் படத்திற்கு பின்னர் வின்னர் போக்கிரி போன்ற படங்களில் நடித்துள்ளார்.. குண்டா இருந்த மாஸ்டர் பரத் இப்போது ஷீரோ பரத்தா மாறிவிட்டார். இவரை இறுதியாக அனுஷ்கா நடிப்பில் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் தமிழ் ரசிகர்கள் பார்த்திருந்தாலும். தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இப்படி ஒரு நிலையில் விவேக்கின் மறைவிற்கு பின்னர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பரத், உத்தமபுத்திரன் படத்தின் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை சொல்லியுள்ளார். அதாவது உத்தம புத்திரன் பாடத்தின் காமெடியின் போது விவேக்கே தன்னை போடா போடா என்று சொல்ல சொன்னாராம். ஆனால், இவர் வயதில் சின்னவர் என்று யோசித்தாராம். இருந்தும் விவேக், பரவாயில்லை என்று கூறி அந்த காட்சியை எடுத்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement