மகன் தான் கொல்லி வைக்கணும், ஆனால் மகள் கொல்லி வைத்த கொடுமை – கதறி அழுத விவேக்கின் மகள். உருக்கமான வீடியோ.

0
2914
vivek
- Advertisement -

தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவான்களில் ஒருவராக திகழ்ந்து வந்த விவேக் நேற்று (ஏப்ரல் 17 ) காலமாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் நடிகர் விவேக். நகைச்சுவையின் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விவேக்.நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் விவேக் லட்ச கணக்கான மரங்களை நட்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 16) நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

-விளம்பரம்-

நடிகர் வீட்டில் இருந்த போது அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டடு நெஞ்சிவலி ஏற்பட்டுள்ளது இதனால் அவரது குடும்பத்தினர் அவரை Sims மருத்துவமனையில் அனுமதித்தனர்.அவருக்கு முதலுதவி அளித்த மருத்துவர்கள் இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாயில் 100 சதவீத அடைப்பு இருந்துள்ளதை கண்டு பிடித்தனர். அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

இதையும் பாருங்க : படத்துல என் புருஷன் பெயரை சொல்லிப்புட்டேன், அதுனால மன்னிப்பு கேட்டேன் – என்ன ஒரு மரியாதை. (வீடியோ இதோ)

- Advertisement -

அவரின் இறுதி சடங்கு போலீஸ் மரியாதையுடன் 72 குண்டுகள் முழுங்க தகனம் செய்யப்பட்டது. இவரது இறுதி சடங்கில் விவேக்கின் மகள் தான் கொல்லி வைத்தார். விவேக் மனைவியின் பெயர் அருள்செல்வி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளது. இளைய மகன் பெயர் பிரசன்னா குமார், மூத்த மகள் பெயர் அமிர்ந்தநந்தினி. இன்னொரு மகள் பெயர் தேஜஸ்வனி. இதில் அமிர்த நந்தினி 1996ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் பிறந்தவர். இவர் தற்போது சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் ஆர்கிடெக்ட் படித்து வந்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டு இளையமகன் பிரசன்னா குமார் மூளைக்காய்ச்சல் காரணமாக இறநதுவிட்ட போது விவேக்கிற்கு உறுதுணையாக இருந்து ஆறுதல் கூறியவர் அமிர்த நந்தினி. இப்படி ஒரு நிலையில் அமிர்த தான் விவேக்கின் இறுதி சடங்கை செய்துள்ளார். அப்போது அப்பா திரும்பி வாங்க பா என்று கதறி அழுதார். அந்த உருக்கமான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement