படத்துல என் புருஷன் பெயரை சொல்லிப்புட்டேன், அதுனால மன்னிப்பு கேட்டேன் – என்ன ஒரு மரியாதை. (வீடியோ இதோ)

0
1348
karnan

‘பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற நாயகன் தனுஷ் நடிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் (ஏப்ரல் 9) வெளியாகி இருந்தது. ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது. மேலும், பண்டாரத்தி பாடல் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இந்த படத்தின் பாடல் வரிகளில் சில மாற்றங்களையும் செய்தார் மாரி செல்வராஜ். இப்படி வெளியாகும் முன்னரே பல சர்ச்சைகளை சந்தித்த இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

1995ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியங்குளம் கிராமத்தின் மீது காவல்துறை கொடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதில் பலர் கொல்லப்பட்டனர். பல கிராமங்கள் சூறையாடப்பட்டன. தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்தப் பின்னணியை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது ‘கர்ணன்’ இந்த படத்திலும் வழக்கம் போல தனுஷ் தனது நடிப்பில் மிரட்டியுள்ளார்.

- Advertisement -

கர்ணன் படத்தில் தனுஷ் தவிர லால், யோகி பாபு, நட்டி போன்றவர்களின் பலர் நடிப்பு பாரட்டப்பட்டது. அந்த வகையில் இந்த பாட்டியின் எதார்த்த நடிப்பும் பலரையும் கவர்ந்தது. உண்மையில் இந்த பாட்டியை படபிடிப்பு நடந்த ஊரில் தான் கண்டாராம் மாரி செல்வராஜ். பின்னர் இவரை நடிக்கவும் வைத்துள்ளார். இவரது வயது 75. கர்ணன் படத்தில் இவர் நடிக்கும் முதல் காட்சியில் பருந்து ஒன்று இவரது கோழி குஞ்சியை தூக்கி சென்றுவிடும்

அப்போது இவர், அந்த பருத்திடன், கிருஷ்ணா அந்த கோழி குஞ்ச போட்டுடுப்பா என்று சொல்வார். உண்மையில் கிருஷ்ணா என்பது மறைந்த இவரது கணவரின் பெயராம். இவரது கணவர் பெயரை வாயால் சொல்ல மாட்டாராம். ஆனால், இந்த படத்தில் மாரி செல்வராஜ் எவ்வளவோ கேட்டுக்கொண்டதால் தான் கிருஷ்ணா என்று அவர் கணவர் பெயரை சொல்லி விட்டாரம். அந்த வசனத்தை பேசி முடித்ததும் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement