மே 3 ஆம் தேதி வரை வரமாட்டேன். என்ன ஆச்சி விவேகிற்கு. ஏன் இந்த திடீர் முடிவு ?

0
949
vivek
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் நடிகர் விவேக். நகைச்சுவையின் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விவேக். இவரின் காமெடியில் நகைச்சுவையும், சமூக சிந்தனையும் இருக்கும். அதனால் தான் இவரை மக்கள் ‘சின்ன கலைவாணர்’ என்று அழைத்து வருகின்றனர். இவர் மேடை நகைச்சுவை கலைஞராக தான் தனது பயணத்தை தொடங்கினார். பின்னர் இவர் 1987 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், நடிகர் விவேக் அவர்கள் சோசியல் மீடியா மூலம் மக்களுக்கு மரத்தின் அவசியத்தை குறித்து அடிக்கடி வீடியோக்களை பதிவிட்டும், கருத்துக்களை பதிவிட்டும் வந்தார். தற்போதைய காலகட்டத்தில் கூட அவ்வப்போது கொரோனா குறித்து விழிப்புணர்வு வீடியோக்களையும் வெளியிட்டு வந்ததார். இந்நிலையில் நடிகர் விவேக் அவர்கள் மே 3ஆம் தேதி வரை சமூக வலைத் தளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

- Advertisement -

இது பல ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நடிகர் விவேக் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது, அன்பான ரசிகர்களே, நண்பர்களே என்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக தான் நான் டுவிட்டரில் இருந்து மே 3ஆம் தேதி வரை விலகுகிறேன் என்று கூறியிருந்தார். நடிகர் விவேக் அவர்கள் கடைசியாக கொரோனா குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் அவர் நாம் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம். மக்களே, இளைஞர்களே, நண்பர்களே கொஞ்சம் யோசித்து செயல்படுங்கள். முழுமையான ஊரடங்கை நாம் பின்பற்றினால் மட்டும் தான் இந்த தொற்று நோயிலிருந்து விடுபட முடியும். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பூஜ்ஜியம் என்று வரும் போது தான் நாம் வெளியே வர முடியும். அது எல்லாம் நம் கைகளில் தான் உள்ளது. இனிமேலாவது அனைவரும் விழிப்புணர்வோடும், தனிமையிலும் இருக்க வேண்டும்.

-விளம்பரம்-

அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். சிங்கப்பூரில் ஆய்வு ஒன்றில் கிடைத்த தகவலின்படி மே மாதம் கடைசியில் இந்த கொரோனா பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த உலகிற்கே மே மாத கடைசியில் விடிவு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. நாம் தமிழக அரசுக்கும், இந்திய அரசுக்கும் ஒத்துழைத்தால் நமக்கும் கூடிய விரைவில் விடிவு கிடைக்கும் என்று கூறியிருந்தார்.

தற்போது இவர் தாராள பிரபு என்ற படத்தில் நடித்திருக்கிறார். நடிகர் ஹரிஷ் கல்யான் ஹீரோவாக நடித்து உள்ள படம் தான் “தாராள பிரபு”. ஹிந்தியில் ஆயுஷ்மான் குர்ரா நடித்து சூப்பர் ஹிட்டடித்த ‘விக்கி டோனர்’ என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் “தாராள பிரபு”. இந்த படத்தை கிருஷ்ணா மாரிமுத்து இயக்குகிறார். இந்த படத்தில் செக்ஸாலஜி டாக்டராக காமெடி நடிகர் விவேக் நடித்திருக்கிறார். இந்த படத்தின் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

Advertisement