கருப்பு கண்ணாடி அணிய காரணம். பாவம் நடிகர் விவேக்கிற்கு இப்படி ஒரு பிரச்னையா.

0
11490
vivek
- Advertisement -

நகைச்சுவையின் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர் நடிகர் விவேக். பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் நீங்காமல் இடம் பிடித்திருக்கிறார். இவரின் காமெடியில் நகைச்சுவையும், சமூக சிந்தனையும் போன்ற விஷயங்கள் இருக்கும். அதனால் இவரை மக்கள் சின்ன கலைவாணர் என்று அழைத்து வருகின்றனர். தனது பயணத்தை மேடை நகைச்சுவை கலைஞராக தொடங்கினார். பின்னர் 1987 ஆம் ஆண்டு சினிமாவில் கால் தடம் பதித்தார். இன்று வரை இவர் படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார். தற்போது இவர் தாராள பிரபு என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-
Image result for tamil actor vivek

- Advertisement -

நடிகர் ஹரிஷ் கல்யான் ஹீரோவாக நடித்து உள்ள படம் தான் “தாராள பிரபு”. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்து உள்ளார். ஹிந்தியில் ஆயுஷ்மான் குராரா நடித்து சூப்பர் ஹிட்டடித்த ‘விக்கி டோனர்’ என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் “தாராள பிரபு”. இந்த படத்தை கிருஷ்ணா மாரிமுத்து இயக்குகிறார். Sperm donation (விந்தணு தானம்) அடிப்படையாகக் கொண்டு ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகி உள்ள படம்.

இந்த படத்தை ஸ்கிரீன் சைன் மீடியா தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் அனிருத், ஷான் ரோல்டன், விவேக் – மெர்வின், மேட்லி ப்ளூஸ், பரத் ஷங்கர், ஊர்கா குழு, கபீர் வாசுகி மற்றும் இன்னோ கங்கா கபீர் 8 இசையமைப்பாளர்கள் பணிபுரிந்து உள்ளனர். இந்த படத்தில் செக்ஸாலஜி டாக்டராக காமெடி நடிகர் விவேக் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

வீடீயோவில் 3 நிமிடத்தில் பார்க்கவும்

மேலும், இந்த படத்தில் டாக்டர் கண்ணதாசன் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் விவேக். இவருடைய காமெடியும், பஞ்ச் டயலாக் வேற லெவல், படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டு வருகிறது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

இந்த நிலையில் நடிகர் விவேக் அவர்கள் இதற்கு முன்னாடி நடித்த படங்களில் எல்லாம் கண்ணாடி அதுவும் கூலிங் கிளாஸ் அணிந்து நடித்து இருப்பார். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அது ஏன் என்று சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் விவேக் அவர்களே கூறியுள்ளார். அது என்னவென்றால், நடிகர் விவேக் இரவு நேரங்களில் எப்படிப்பட்ட காட்சியிலும் நடித்து விடுவார்.

ஆனால், பகல் நேரத்தில் சரியான வெளிச்சத்தில் கண்கள் கொஞ்சம் சரியாக தெரியாமல் போகுமாம். இதனால் ஆரம்பத்தில் விவேக் கொஞ்சம் சிரமப்பட்டு இருந்தாராம். பின் தன்னுடைய பவர் கிளாஸ்யை கூலிங் கிளாஸாக மாற்றினார். அதனால் தான் நடிகர் விவேக் படங்களில் எப்போதும் கண்ணாடி அணிந்து நடித்து இருப்பதாக கூறி உள்ளார்.

Advertisement