தமிழ் சினிமா உலகில் சின்ன கலைவாணர் என்ற பட்டத்தை பெற்று என்றென்றும் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவர் நடிகர் விவேக். இவர் 1990களின் தொடக்கத்தில் காமெடி நடிகராக தமிழ்த் திரையுலகத்தில் தன்னுடைய பயணத்தை தொடங்கி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். பின் ஹீரோவாகவும் இவர் சில படங்களில் நடித்திருந்தார்.

அதோடு இவர் நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் இருந்தார். அதிலும் இவர் மறைந்த அப்துல்கலாமின் தீவிர ரசிகர். அவர் மீது கொண்ட பற்றின் காரணமாக இவர் லட்ச கணக்கான மரங்களை நட்டு இருந்தார். அதுமட்டும் இல்லாமல் 1 கோடி மரங்களை நடுவது தான் இவரின் கனவாக இருந்தது. ஆனால், கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

Advertisement

விவேக் திரைப்பயணம்:

பின் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கி இருந்தது. கடைசியாக இயக்குனர் சுந்தர் சியின் இயக்கத்தில் ஆர்யா நடித்து இருந்த அரண்மனை 3 திரைப்படத்தில் விவேக் நடித்து இருந்தார். இந்த படம் விவேக் மறைவுக்கு பின் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விவேக்கின் தாயார்

விவேக்கின் அக்கா அளித்த பேட்டி:

அதேபோல் விவேக் நினைவாக அவர் வசித்து வந்த பெருநகர சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டலத்தில் உள்ள பத்மாவதி நகர் பிரதான சாலையை ‘சின்னக் கலைவாணர் விவேக் சாலை’ என பெயர் மாற்றம் செய்து இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் விவேக்கின் அக்கா விஜயலட்சுமி பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் விவேக் குறித்து கூறியிருந்தது, சிறுவயதிலேயே விவேக் மிகவும் சுட்டித்தனமாக இருப்பார். எங்களுடைய அப்பா மாதத்தில் பத்து நாட்கள் தான் வீட்டில் இருப்பார்.

Advertisement

விவேக் குறித்து சொன்னது:

மீதி நாட்கள் எல்லாம் அவருக்கு வெளியில் தான் வேலை. அதனால் வீட்டில் இருக்கும் அந்த கொஞ்சம் நாட்கள் கூட எங்களை அடிக்க மாட்டார், திட்ட மாட்டார். நிர்வாக பொறுப்பு அனைத்துமே அம்மா தான். வெளியில் எங்காவது செல்லும் சூழ்நிலை ஏற்பட்டால் அம்மா எங்களுடைய பாட்டியிடம் எங்களை விட்டுவிட்டு செல்லுவார்.எங்களுடைய பாட்டி இவர்கள் இரண்டு பேரையும் பார்த்துக்கொண்டார். விவேக் மட்டுமே அழைத்துக் கொண்டு செல் என்று சொல்லுவார். அந்த அளவிற்கு அவர் சுட்டித்தனம் செய்வார்.

Advertisement

இறப்பு அன்று நடந்த விஷயம் :

அவன் இறக்கும் அன்று காலை 10 மணிக்கு என்னிடம் பேசினான். அதற்கு முன்னர் அவனுக்கு உடல் வலி இருந்தது. நானும் அவனிடம் சில மாத்திரை போட்டு தூங்க சொன்னேன். ஆனால். 10.30 மணிக்கு அவனை மருத்துவமனையில் அனுமதித்து இருந்தனர். அவன் இறப்பு இன்னும் என்னால் மறக்க முடியல. காலைல எழுந்தால் கூட அவனை நினைத்துக்கொண்டு தான் எழுகிறேன் என்று உருக்கமுடன் பேசி இருக்கிறார்.

Advertisement