இதை நான் விஜய் அண்ணாவின் பொக்கிஷமாக வைத்துக்கொள்வேன்! பாடலாசிரியர் விவேக்

0
2072
vijay

தளபதியின் மெர்சல் படம் வெளியாகி 14 நாட்களில் 210 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமாவில் எந்த ஒரு படமும் இவ்வளவு குறைந்த நாட்களில் 200 கோடி வசூல் செய்ததில்லை.
mersalஅப்படியான ஒரு வெற்றியை பதிவு செய்தது மெர்சல்.இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் சில தினங்களுக்கு முன்னர் தளபதி விஜய் தனது வீட்டில் படக்குழுவிற்கு விருந்து வைத்தார்.

இதையும் படிங்க: மெர்சல் படத்தின் வெற்றிக்கு காரணமான சரியான 5 விஷயங்கள்!

இந்த விருந்தில் ஏ.ஆர் ரஹ்மான், பாடாலசிரியர் விவேக், எஸ்.ஜே சூரியா மற்றும் படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர். இந்த விருந்தினைப் பற்றி பாடலாசிரியர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.இது ஒரு மறக்க முடியாத நாளாகும், இந்த வாய்ப்பினைக் கொடுத்த தளபதி மற்றும் இசைப்புயல் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.”
vijay மேலும், அவருடன் எடுத்த இந்த புகைப்படத்தை வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாக வைத்து பாதுகாக்கப் போகிறேன்’என மனம் நெகிழ ட்வீட் செய்திருந்தார்.