விவேக், வடிவேலு உறவு பற்றி விவேக் மனைவி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் சின்ன கலைவாணர் என்ற பட்டத்தை பெற்று என்றென்றும் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவர் விவேக். இவர் 1990களின் தொடக்கத்தில் காமெடி நடிகராக தமிழ்த் திரையுலகத்தில் தன்னுடைய பயணத்தை தொடங்கி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

பின் ஹீரோவாகவும் இவர் சில படங்களில் நடித்திருந்தார். அதோடு இவர் நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் இருந்தார். அதிலும் இவர் மறைந்த அப்துல்கலாமின் தீவிர ரசிகர். அவர் மீது கொண்ட பற்றின் காரணமாக இவர் பல லட்ச கணக்கான மரங்களை நட்டு இருந்தார். அதுமட்டும் இல்லாமல் 1 கோடி மரங்களை நடுவது தான் இவரின் கனவாக இருந்தது. ஆனால், கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
விவேக் மறைவு :
பின் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அவர் கடைசியாக ‘இந்தியன் 2 ‘ படத்தில் கமிட் ஆன போது தான் உயிரிழந்தார். இதற்கிடையே, நடிகர் விவேக் அவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதும், ஒரு ஆண் குழந்தை உடல் நலக்குறைவால் மறைந்ததும் நாம் அறிந்ததே.

விவேக் குடும்பம்:
அதில், விவேக் – அருள் செல்வியின் மூத்த மகள் பெயர் அம்ரிதா நந்தினி, இவர் ஒரு ஆர்க்கிடெக்காக இருக்கிறாராம். இரண்டாவது மகள் தேஜஸ்வினி. இவருக்கு தான் கடந்த ஆண்டு திருமணம் நடந்ததாம். பெங்களூருவில் வசித்து வரும் அவர் சட்டப்படிப்பு படித்து வருகிறாராம். அதோடு விவேக்கின் மருமகன் அமேசான் நிறுவனத்தில் பெரிய பதவியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர்களைத் தொடர்ந்து பிறந்தவர்தான் பிரசன்னா. இவர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2015 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார்.
https://www.youtube.com/watch?v=wt-jsCWnZyw
விவேக் மனைவி பேட்டி:
பிரசன்னாவின் மறைவுக்குப் பிறகு விவேக் – அருள் செல்வி தம்பதிகளுக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தார்களாம் . இவர்களுக்கு தற்போது ஏழு வயது ஆகிறது. இப்படி இருக்கும் நிலையில் விவேக்- வடிவேலு உறவு குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் விவேக்கின் மனைவி அருள் செல்வி கூறியிருப்பது, விவேக் சாரும், வடிவேலு சாரும் ரொம்ப க்ளோஸ். ரெண்டு பேருமே பிரண்ட்ஸா தான் இருந்தார்கள். அவ்வளவு ஏன், பத்மஸ்ரீ விருது கொடுத்த போது கூட ஷூட்டிங்கில் இருந்த வடிவேலு சார் போன் செய்து வாழ்த்திருந்தார்.

விவேக்- வடிவேலு உறவு:
சாரோட மறைவுக்கு பிறகு வீட்டிற்கு வடிவேல் சார் வந்திருந்தார். அவருடைய போட்டோவை பார்த்து ரொம்ப அழுதார். அதற்குப் பிறகு மகள்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். என்னுடைய மகள்களுக்கு அவரை ரொம்ப பிடிக்கும். அவருடைய காமெடியை ஒன்று விடாமல் பார்ப்பார்கள். என்னுடைய இரண்டாவது மகள் அவருடைய காமெடியை மனப்பாடமாக அப்படியே சொல்லுவார். நாங்கள் இருக்கும் ஏரியாவை பார்த்து, இங்கு ஏதாவது இடம் இருக்காமான்னு கேட்டார். பின் எங்கள் தெருவில் தான் வடிவேலு புதிதாக வீடு கூட வாங்கி இருக்கிறார். அவர்கள் இருவரும் எப்போதுமே நல்ல நண்பர்களாகத்தான் இருந்தார்கள் என்று கூறி இருக்கிறார்.






