தமிழ் சினிமா உலகில் சின்ன கலைவாணர் என்ற பட்டத்தை பெற்று என்றென்றும் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவர் நடிகர் விவேக்.இவர் ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா என்று பல முன்னணி நடிகர்கள் முதல் தற்போதிருக்கும் இளம் நடிகர்கள் வரை என பல பேருடன் இணைந்து நடித்திருக்கிறார். இவர் சினிமாவை தாண்டி பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் இருக்கிறார்.கடந்த ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காரணமாக பலனின்றி காலமானார்.
அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இவரின் மறைவுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். விவேக் தனுசுடன் பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர்கள் காம்போவில் வந்த அணைத்து படத்தின் காமடிகளும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
அந்த வகையில் படிக்காதவன், Vip, உத்தமபுத்திரன் போன்ற படங்களில் விவேக் – தனுஷ் காம்போவில் வந்த காமெடி பெரும் ஹிட் அடித்தது. இப்படி ஒரு நிலையில் உத்தமபுத்திரன் இயக்குனர் குறித்து விவேக் பேசி இருக்கும் வீடியோ ஒன்று தற்போது பெரும் வைரலாக பரவி வருகிறது. தனுஷ் நடித்த உத்தமபுத்திரன் படம் சுமாரான விமர்சனத்தை பெற்றாலும். அதில் வந்த காமெடி பெரும் ஹிட் அடித்தது.
இதை தொடர்ந்து தற்போது தனுஷ் ஜவஹர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் படத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இந்த படம் வெளியாகி இருந்தது. மேலும், இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் தனுஷ்- மித்ரன் ஜவஹர் குறித்து மறைந்த நடிகர் விவேக் அளித்திருந்த பேட்டி வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, உத்தம புத்திரன் படத்தை மித்ரன் ஜவஹர் தான் இயக்கி இருந்தார். இந்த படத்தில் தனுஷ், ஜெனிலியா, விவேக் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். அப்போது பேட்டியில் விவேக் அவர்கள் தனுஷ் மீண்டும் மித்ரன் ஜவஹருக்கு வாய்ப்பு அளித்தால் நன்றாக இருக்கும் என்று கூறி இருந்தார்.
அன்றே விவேக் கணித்து இருந்ததை இன்று தனுஷ் நிறைவேற்றி இருக்கிறார். தனுஷ் அவர்கள் வாத்தி, sir போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதோடு மாதேஸ்வரன்-தனுஷ் கூட்டணியில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாக இருக்கிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் இவர் நடித்த தி கிரே மேன் என்ற படம் வெளியாகி இருந்தது. ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை.