பொது மேடையில் சரவணா ஸ்டோர்ஸ் முதலாளியை கலாய்த்த விவேக்

0
930
- Advertisement -

புதுமுக இயக்குனர் வி பி விஜி இயக்கியுள்ள “எழுமின் ” என்ற படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா சென்னயில்நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் கார்த்திக், சிம்பு , விஷால் ஆகியோர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்குபெற்றனர். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள காமெடி நடிகர் விவேக்கும் பங்குபெற்றிருந்தார்.

-விளம்பரம்-

saravana

- Advertisement -

குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம், தமிழில் வெளியாகும் முதல் தற்காப்புக்கலை பற்றியபடம் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் விளையாடி உள்ள அரசியலை பற்றி கூறும் ஒரு சமூக அக்கரை கொண்ட கதையை இயக்குனர் விஜி கையாண்டுள்ளார்.

இந்த ட்ரைலர் வெளியிட்டு விழாவில் பேசிய நடிகர் விவேக், “சிம்பு , அஜித் , விஜய் ஆகியோர்கள் சினிமாவில் அவரவர்கேற்ப நடனத்தில் ஒரு ஸ்டைலை வைத்திருக்கிறாரகள். ஆனால் அதையெல்லாம் தாண்டி “டக்கரு டக்கரு”என்று ஒருவர் என்று ஒருவர் நடனமாடுகிறார் அது மிகவும் பிரபலமடைந்து விடுகிறது” என்று கூறியவுடன் அரங்கமே சிரித்தது.

-விளம்பரம்-

பின்னர் அந்த நடனத்தை நான் ஆடிக்காட்டுகிறேன் என்று மேடையிலேயே டக்கரு டக்கரு என்று பாடிக்கொண்டு நடனமாடினார் விவேக். பின்னர் ஆடி முடித்துவிட்டு, அந்த நபர் யாரென்று நீங்களே கண்டுபிடித்து கொள்ளுங்கள் என்று கூறியவுடன், கூட்டத்தில் இருப்பவர்கள் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் என்று கூச்சலிட்டனர். அதற்கு நடிகர் விவேக் சிரித்துக் கொண்டே “இப்படி மாட்டி விட்டுடீங்களே , தனக்கு ஒன்றும் தெரியாது, தான் ஒரு அப்பாவி “என்று கூறியவுடன் அனைவரும் சிரித்தனர்.

Advertisement