பிரபல சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் வி ஜே அஞ்சனா, சன் ம்யூசிக் என்று சொன்னாலே அனைவருக்கும் நியாபகத்தில் வருவது அஞ்சனா ரங்கன் தான். இவர் தொலைக்காட்சிகளில் வீடியோ ஜாக்கியாக தான் அறிமுகமானர். இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக உள்ளவர் தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன். இவர் சன் ம்யூசிக் தொலைக்காட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து தற்போது வரை பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.
மேலும், இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த கயல் படத்தில் நடித்த சந்திரனை கடந்த 2016 ஆம் ஆண்டு தொகுப்பாளினி அஞ்சனா திருமணம் செய்து கொண்டார். அதோடு இவருக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தான் ஒரு அழகான ஆண் குழந்தை கூட பிறந்தது.
இதனால் இவர் சில ஆண்டுகள் மீடியாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். தற்போது 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தொகுப்பாளினியாக ரி-என்ட்ரி கொடுத்து உள்ளார். ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பங்குபெற்று வந்தார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்து வந்தார்.
அந்த வகையில் ரசிகர் ஒருவர், நீங்கள் ஏன் படங்களில் நடிப்பது இல்லை என்று கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த அவர், இந்த 12 ஆண்டுகளில் பல பட வாய்ப்புகள் வந்தது. ஆனால், எனக்கு நடிப்பின் மீது ஆர்வம் இல்லை. அதே போல நான் போட்டோ ஷூட் பண்ணலே, ஓ சினிமாவில் நடிக்கும் ஆசை வேற இருக்கானு நக்கலா கேப்பாங்க. சின்ன ஸ்க்ரீன் பெரிய ஸ்க்ரீன் என்பது கிடையாது. என்னுடைய இடம் இதான் என்று கூறியுள்ளார்.