திருமணம் செய்துகொள்ள கேட்ட அல்லு அர்ஜுன் ரசிகர்- தன்னை பற்றி சொன்னதும் அவரின் ரியாக்ஷன் பாருங்க.

0
583
anjana
- Advertisement -

பிரபல சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் வி ஜே அஞ்சனா, சன் ம்யூசிக் என்று சொன்னாலே அனைவருக்கும் நியாபகத்தில் வருவது அஞ்சனா ரங்கன் தான். இவர் தொலைக்காட்சிகளில் வீடியோ ஜாக்கியாக தான் அறிமுகமானர். இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக உள்ளவர் தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன். இவர் சன் ம்யூசிக் தொலைக்காட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து தற்போது வரை பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

10 ஆண்டு கலக்கிய அஞ்சனா :

மேலும், இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த கயல் படத்தில் நடித்த சந்திரனை கடந்த 2016 ஆம் ஆண்டு தொகுப்பாளினி அஞ்சனா திருமணம் செய்து கொண்டார். அதோடு இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தான் ஒரு அழகான ஆண் குழந்தை கூட பிறந்தது.

- Advertisement -

திருமணத்திற்கு பின் ரீ – என்ட்ரி :

இதனால் இவர் சில ஆண்டுகள் மீடியாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். தற்போது 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தொகுப்பாளினியாக ரி-என்ட்ரி கொடுத்து உள்ளார். ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பங்குபெற்று வந்தார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்து வந்தார்.

புஷ்பா வெற்றி விழா :

அதே போல சமீப காலமாக சின்னத்திரை பக்கம் அவ்வளவாக தலை காண்பிக்காமல் இருந்து வரும் இவர் பட விழாக்களுக்கு தொகுப்பாளினியாக சென்று வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ பட வெற்றி விழாவில் தொகுப்பாளினியாக இருந்தார்.

-விளம்பரம்-

திருமணம் செய்துகொள்ள கேட்ட நபர் ;

இப்படி ஒரு நிலையில் இந்த விழாவின் போது அல்லு அர்ஜூனுடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் அஞ்சனா. அதில் ‘ஜகான் ஸ்டாரின் மிகப்பெரிய ரசிகை நான். அல்லு அர்ஜுனின் ‘ஆர்யா ‘ படத்தால் தான் தெலுங்கு படங்களை பார்க்க ஆரம்பித்தேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

அஞ்சனா கொடுத்த பதில் :

இந்த பதிவை பார்த்த அல்லு அர்ஜுனின் ரசிகர் ஒருவர் ”உங்களை காதலிக்கிறேன், நாம் திருமணம் செய்துகொள்ளலாம் என்று பதிவிட்டார். அதற்கு அஞ்சனா ‘நான் திருமணமானவல் எனக்கு மூன்றரை வயதில் மகன் இருக்கிறான்’ என்று பதில் கொடுத்தார். அதற்கு அந்த நபர் ‘உங்களின் விவரங்களை பார்க்காமல் இப்படி பதிவிட்டு விட்டேன்’ என்று கூற அதற்கு அஞ்சனா ‘நோ problem’ என்று கூலாக பதில் கொடுத்துள்ளார்.

Advertisement