விஜே அஞ்சனா பதிவிட்ட ட்விட்டை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வரும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவர் தொலைக்காட்சிகளில் வீடியோ ஜாக்கியாக தான் அறிமுகமானர். இருந்தும் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார் அஞ்சனா ரங்கன். மேலும், பிரபல சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் வி ஜே அஞ்சனா. இவர் சன் ம்யூசிக் தொலைக்காட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து தற்போது வரை பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.
நடிகர் சந்திரன் என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு தொகுப்பாளினி அஞ்சனா திருமணம் செய்து கொண்டார். இதனால் இவர் சில ஆண்டுகள் மீடியாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். தற்போது 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தொகுப்பாளினியாக ரி-என்ட்ரி கொடுத்து உள்ளார். ஜி தமிழில் ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பங்குபெற்று வந்தார். சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ பட வெற்றி விழாவில் கூட தொகுப்பாளினியாக இருந்தார்.
இதையும் பாருங்க : ‘அவர் ஒருத்தருக்கு மட்டும் தான் அடங்குவேன்’ – வளர்த்தவர் கை காட்டியதும் , குழந்தை போல அடங்கிய காளை. வீடியோ இதோ.
மாத்தி போட்ட ட்வீட் :
அதோடு இவர் எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார். இப்படி ஒரு நிலையில் விஜே அஞ்சனா பதிவிட்ட டீவ்ட் தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அப்படி என்ன அவர் பதிவிட்ட என்றால், கமலஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்காக விஜே அஞ்சனா வாழ்த்து சொல்வதற்காக டுவிட்டரில் பதிவு போட்டிருந்தார். ஆனால், அவர் மாத்தி விராட் கோலியின் டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து சொல்லியிருக்கிறார். ஆனால், விராட் கோலி தான் ஓய்வு பெற இருப்பதாக டிவிட்டரில் அறிவித்து இருந்தார்.
கேலி செய்த நெட்டிசன்கள் :
இந்த நிலையில் விஜே அஞ்சனா பதிவிட்ட டீவ்ட் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. மேலும், இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும், ‘என்ன போதையில் இருக்கிறீர்களா? என்ன ஆச்சு உங்களுக்கு? இது கூட பார்க்க முடியாத? அப்படி என்ன நினைப்பில் இருக்கிறீர்கள்? என்று பல்வேறு விதமாக கலாய்த்து கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். உடனே விஜே அஞ்சனா அந்த டுவிட்டரை டெலிட் செய்து வேறு ஒரு டீவ்ட் போட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, அடப்பாவிங்களா, சந்தோஷத்தில் இருக்கிறேன்.
அஞ்சனா விளக்கம் :
வேலைக்கு நடுவில் மாற்றிக் கவனிக்காமல் டீவ்ட் போட்டுட்டேன். இதுக்கெல்லாம் இப்படி பண்ணுவீங்களா? சரி நல்ல விஷயத்தை கவனிங்க. ஆனால், ஒன்னு அத்தனை பேரும் ஒரே நெனப்புல தான் இருக்கிறீர்கள் என்று நல்லா தெரியுது என்று போட்டிருந்தார். இப்படி இவரின் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் விஜே அஞ்சனா சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து கூறி மீண்டும் டீவ்ட் போட்டு இருந்தார். இதைப்பார்த்த சிவகார்த்திகேயன் நன்றி கூறி ட்வீட் போட்டிருக்கிறார். மேலும், கமலஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது.
கமல் படத்தில் சிவகார்த்திகேயன் :
இதனை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் அயலான், டான் ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். பொதுவாகவே கமலஹாசன் அவர்கள் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் மற்ற ஹீரோக்களை வைத்து எப்போதாவது தான் படங்களை தயாரிப்பார். இதற்கு முன்பு 1987இல் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற படத்தில் சத்யராஜ், 2003இல் நள தமயந்தி என்ற படத்தில் மாதவன், 2019ல் கடாரம் கொண்டான் படத்தில் விக்ரம். இப்போது இந்தப் பட்டியலில் சிவகார்த்திகேயனும் இணைந்திருக்கிறார். இதனால் தமிழ் திரையுலகில் பலரும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.