10 வருடமாக என் கணவர் அதற்காக காத்து கொண்டு இருக்கிறார், ஆனா – விஜே பாவனா சொன்ன சீக்ரெட்

0
231
- Advertisement -

தன்னுடைய கணவரை குறித்து முதன்முதலாக மனம் திறந்து தொகுப்பாளினி பாவனா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பிரபலமாகுவதற்கு முன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் மக்கள் மனதில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்து விடுகிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் ஒரு காலத்தில் விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்ந்தவர் பாவனா. இவர் ரேடியோ ஜாக்கியாக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். இவர் முதன் முதலில் ராஜ் டிவியில் ஒளிபரப்பான பீச் கேர்ள்ஸ் என்ற நிகழ்ச்சி தான் தொகுத்து வழங்கியிருந்தார். அதற்கு பின்னர் தான் இவர் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பிரபலமானார். இதில் இவர் சூப்பர் சிங்கர் ஜூனியர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

- Advertisement -

பாவனா குறித்த தகவல்:

அதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதோடு இவர் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். பிறகு இவர் இந்தியாவின் பிரபலமான விளையாட்டு பத்திரிகைகளில் ஒருவராக மாறினார். அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் ஐபிஎல், உலகக் கோப்பை டி20, நியூசிலாந்துக்கு எதிரான சமீபத்திய தொடர், கால்பந்து, கபடி, கைப்பந்து போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

பாவனா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி:

அதுமட்டுமில்லாமல் சினிமா தொடர்பான ஆடியோ வெளியீட்டு விழாக்களையும், பத்திரிகையாளர்கள் சந்திப்புகள், விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார். அதோடு சில ஆண்டுகளாகவே இவர் விஜய் டிவி பக்கம் வரவில்லை. அதற்கு பாவனா, நான் இனி விஜய் டிவி பக்கம் போகவேண்டாம் என்று நினைத்திருக்கிறேன். ஏன்னா, அவங்க ஸ்டைல் வேற, இப்ப என் ஸ்டைல் வேற ஆகிவிட்டது என்று கூறி இருக்கிறார்.

-விளம்பரம்-

பாவனா பேட்டி:

இதனிடையே இவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் குடியேறினார். இந்த நிலையில் சமீபத்தில் பாவனா பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் தன்னுடைய கணவர் குறித்து சொன்னது, அவருடன் என்னால் விடுமுறை நாட்களில் இருக்க கூட முடியவில்லை. எங்களுக்கு திருமணமாகி 10 வருடம் ஆகிவிட்டது. வெளியே எங்கேயாவது செல்ல வேண்டும் என்றால் நேரம் கிடைக்க மாட்டேங்கிறது. அப்படியே போக வேண்டும் என்றாலும் அடுத்த மாதம் என்ன பண்ண போறீங்க? என்று முன்னாடி அவர் கேட்பார். அவர் எல்லாத்தையுமே காலண்டரில் குறித்து வைத்துக் கொள்வார்.

கணவர் குறித்து சொன்னது:

நாங்கள் இருவரும் சந்திப்பது முதல் அதில் குறித்து வைத்துக் கொள்வார். நாங்கள் இருவரும் சந்திக்கப்போகும் நாளுக்கு அவர் எல்லாத்தையும் ஒதுக்கி வைத்து காத்துக் கொண்டிருப்பார். நமக்கு எப்பவாது தான் வேலை வரும். அப்படி பெரிய வேலை வரும்போது அதை ஒத்தி வைக்கவும் முடியாது. இருந்தாலும் அவர் அதை எல்லாம் புரிந்து கொண்டு என்னுடன் இயல்பாக நடப்பார். சில நேரத்தில் கோபம் வரும். இருந்தாலும் போடி என்று ஜாலியாக எடுத்துக் கொள்வார். அவர் என் மீது பொசசிவ் தான். இருந்தாலும் ரொம்ப பொசசிவ் எல்லாம் கிடையாது. காதல் வாழ்க்கைக்கு பொசசிவ் ரொம்ப முக்கியம் தான். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்வது ஒரு தனி சுகம் என்று கூறியிருக்கிறார்.

Advertisement