சித்ராவின் முதலாம் ஆண்டு நினைவு நாள். – விசாரிக்கப்படாத மொபைல் கால்,விலகாத மர்மம் .

0
927
chitra
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் சித்ராவை யாராலும் மறக்க முடியாது. தான் வாழ்ந்த கடைசி நாட்களில் முல்லை என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சித்ரா. இவருடைய மரணம் இன்று வரையும் யாராலும் நம்பவும் முடியவில்லை, ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதை பாதித்தது. இவர் சாதாரண குடும்பத்தில் பிறந்து தன்னுடைய கடும் உழைப்பினாலும் விடா முயற்சியினாலும் இந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். மேலும், விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சிக்கு பார்வையாளராக வந்த இவர் அதே சேனலில் பிரபலமான சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

-விளம்பரம்-
chitra

இப்படி புகழின் உச்சத்தில் இருந்த சித்ரா தூக்கிட்டு மர்மமான முறையில் இறந்தார். இவர் தற்கொலைக்கு முழுக்க முழுக்க அவர் கணவர் ஹேமநாத் தான் காரணம் என்று சித்ராவின் பெற்றோர்கள் கூறியதால் ஹேம்நாத்தை போலீஸ் கைது செய்து விசாரித்தது. அதன் பின் அவர் ஜாமீனில் வெளியே வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில் இன்று சித்ரா உடைய முதலாம் ஆண்டு நினைவு தினம். இவர் இறந்து இன்றோடு ஒரு ஆண்டு முடிந்துவிட்டது. இவருடைய திடீர் மரணத்திற்கு காரணம் என்ன? தற்கொலையா? கொலையா? அதற்கு காரணமானவர்கள் யார்? சித்ராவிற்கு நீதி கிடைத்ததா? என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருக்கின்றன.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து இது குறித்து சித்ராவின் தாயார் கூறியிருப்பது, இன்னும் எங்களால் அவளை மறக்க முடியவில்லை, நினைக்காமல் இருக்க முடியவில்லை. பிரண்ட்ஸ், கூட நடித்தவர்கள் என எல்லோருடனும் அன்பாக பேசி கலகலப்பாக இருப்பார். எங்களை கடைசி வரையும் காப்பாற்றுவாள் என்று நம்பினோம். ஆனால், எங்களை ஏமாற்றி இப்படி அழ வைத்து விட்டு போய் விட்டாள். கல்யாணம் முடித்து வைக்க வேண்டும் என்று நினைத்து ஒரு மாப்பிள்ளை என்று ஒருவனை கூட்டி வந்து நிறுத்தியது தப்பா போச்சி. அவனாலே என் பொண்ணோட வாழ்க்கை போய் விட்டது. இன்னும் என் பொண்ணுக்கு நியாயம் கிடைக்கவில்லை. கிடைக்குமா? என்றும் தெரியவில்லை என்று கண்ணீருடன் கூறி உள்ளார்.

chitra

மேலும், சித்ராவின் குடும்பத்தினரும், ரசிகர்களும் இவர் தற்கொலை தான் செய்துகொண்டார்? என்பதாய் ஏற்றுக்கொள்ள வில்லை. முதல் நாள் இரவு 10 மணி வரை ஷூட்டிங்கில் கலந்து கொண்டவர். அடுத்த மூன்று மணி நேரத்துக்குள், தங்கியிருந்த ஹோட்டல் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய முகத்தில் ரத்த காயங்கள் ஏற்பட்டிருந்தது. இதற்கு என்ன அர்த்தம் என்று கேள்வி எழுப்பினார்கள். கடைசியில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் ரவி தான் தற்கொலைக்கு தூண்டினார் என்று வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். ஆனால், அவர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். மேலும், ரசிகர்களும், சித்ராவின் குடும்பத்தினரும் இன்று அவருடைய நினைவு நாளுக்கு மனவேதனையுடன் பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-

அதில் ரசிகர்கள் இன்று வரை சித்ராவிற்கு நியாயம் கிடைக்கவில்லை.கடைசி 24 மணி நேரத்தில் அவருடன் பேசியவர்கள், அவரைத் தொலைசேியில் தொடர்பு கொண்டவர்கள் என எல்லோரையும் விசாரிக்க வேண்டியது அவசியம். சித்ராபின் மொபைல் அழைப்புகளைத் தீர விசாரித்தாலே அந்த விசாரணை உண்மையான காரணத்தை நோக்கி நகர்த்தக் கூடும். ஆனால் போலீஸ் அதைச் செய்யவில்லை. இங்கேயே முதல் கோணல் தொடங்கிவிட்டது. அலட்சியமான விசாரணையா? என்ற கேள்வி எழ காவல்துறையே காரணம்.

போலீஸ் சரியான கோணத்தில் விசாரித்து இருந்தால் இந்த வழக்கு முடிந்து இருக்கும். ஆனால், போலீஸ் அதை செய்யவில்லை. இது அலட்சியமான விசாரணையா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதோடு இந்த வழக்கை விரைந்து முடித்து உண்மையான குற்றவாளிளுக்கு தண்டனை வாங்கித் தந்தால் மட்டுமே சித்ராவின் ஆன்மா அமைதி கொள்ளும், சாந்தி அடையும் என்று கூறி இருக்கிறார்கள். இதற்கு காவல்துறை துணை நிற்குமா? என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

Advertisement