பண்டல் பண்டலாக ஆணுறை, கஞ்சா, சரக்கு பாட்டில் – ஹேம்நாத்தின் ரகசிய அறையை திறந்து காட்டிய அவரின் 8 வருட நண்பர். ஷாக்கிங் வீடியோ.

0
772
Chitra
- Advertisement -

சமீபத்தில் சித்ராவின் மரணத்தில் அரசியல் பிரபலத்தின் தொடர்பு இருப்பதாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் கூறி இருந்த நிலையில் கடந்த சில தினங்களாக மீண்டும் சித்ரா மரணம் குறித்த செய்திகள் வைரலாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் சித்ராவை யாராலும் மறக்க முடியாது. தான் வாழ்ந்த கடைசி நாட்களில் முல்லை என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சித்ரா. இவருடைய மரணம் இன்றும் யாராலும் நம்பவும் முடியவில்லை, ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதை பாதித்த ஒன்று. இவர் சாதாரண குடும்பத்தில் பிறந்து தன்னுடைய கடும் உழைப்பினாலும், விடா முயற்சியினாலும் இந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.

-விளம்பரம்-
Vj Chitra Suicide Case Jayakumar Explanation| சித்ரா மரணம்

விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சிக்கு பார்வையாளராக வந்த இவர் அதே சேனலில் பிரபலமான சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இப்படி புகழின் உச்சத்தில் இருந்த சித்ரா தூக்கிட்டு மர்மமான முறையில் இறந்த சம்பவம் பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சித்ரா அவர்கள் சீரியல் ஷூட்டிங்குக்காக பூந்தமல்லி அருகே பெங்களூரு பைபாஸ் சாலையில் அமைந்திருக்கும் ஹோட்டலில் தனது கணவர் ஹேமநாத்துடன் தங்கியிருந்தார்.

- Advertisement -

சித்ராவின் கணவர் ஹேம்நாத் :

அப்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டு இருந்தார்.இவர் தற்கொலைக்கு முழுக்க முழுக்க காரணம் அவர் கணவர் ஹேமநாத் தான் என்று சித்ராவின் பெற்றோர்கள் புகார் அளித்து இருந்ததால் ஹேம்நாத்தை போலீஸ் கைது செய்து விசாரித்து இருந்தது. அதன் பின் அவர் ஜாமீனில் வெளியே வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சில மாதங்களுக்கு முன் தான் சித்ரா உடைய முதலாம் ஆண்டு நினைவு தினம் வந்து இருந்தது.

அரசியல்வாதி காரணமா ?

இவர் இறந்து ஒரு ஆண்டு முடிந்துவிட்டது. ஆனால், இவருடைய திடீர் மரணத்திற்கு காரணம் என்ன? தற்கொலையா? கொலையா? அதற்கு காரணமானவர்கள் யார்? சித்ராவிற்கு நீதி கிடைத்ததா? என்று இன்னும் விடை தெரியாமல் இருக்கின்றது.இப்படி ஒரு சூழ்நிலையில் சித்ரா மரணத்திற்கு அரசியல்வாதிகள் தான் காரணம். என் உயிர்க்கும் ஆபத்து இருக்குது. எனக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை என்று ஹேமநாத் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். இப்படி இவர் கூறியதை அடுத்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் கிளம்பி இருக்கிறது.

-விளம்பரம்-

சித்துவின் அம்மா கண்ணீர் :

இந்நிலையில் சித்ராவின் அம்மாவிடம் இது தொடர்பாக பேட்டி கொடுத்து இருந்தார். அதில் அவர், அரசியல்வாதியின் மகன் தான் சித்ராவின் மரணத்திற்கு காரணம் என்று ஹேம்நாத் அளித்திருந்த பேட்டி நம்ப முடியாத வகையில் இருக்கிறது. இதை இவர் அப்போதே சொல்லியிருந்தால் உண்மை வெளியே வந்திருக்கும். இப்போது தப்பிப்பதற்காக தான் இந்த மாதிரி தேவையில்லாமல் ஹேம்நாத் செய்கிறார்.

ஹேம்நாத்தின் 8 வருட நண்பர் :

மேலும், சித்ராவை அவன் தான் கொன்றான் என்றும் தற்போதும் கூறி வருகிறார். இப்படி ஒரு நிலையில் ஹேம்நாத்தின் 8 வருட நண்பர் சித்ரா மற்றும் ஹேம்நாத் தங்கி இருந்த அறையில் இருந்த பொருட்களை எல்லாம் காண்பித்து இருக்கிறார். அதில், கஞ்சா, ஆணுறை, சரக்கு என்று பல பொருட்கள் சிக்கி இருக்கிறது. மேலும், ஹேம்நாத்திற்கு பெண்களை ஏமாற்றுவதும், பணத்தை ஏமாற்றுவதும் தான் வேலை என்றும் கூறியுள்ளார்.

Advertisement