சித்ரா இறப்புக்கு முன் ஹோட்டல் அறையில் நடந்தது என்ன ? – முதன் முறையாக மனம் திறந்த ஹேம்நாத்.

0
521
VjChitra
- Advertisement -

சித்ரா இறப்பதற்கு முன் நடந்ததை குறித்து முதன் முறையாக பேட்டியில் மனம் திறந்த சித்ரா கணவர் ஹேமநாத்தின் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் சித்ராவை யாராலும் மறக்க முடியாது. தான் வாழ்ந்த கடைசி நாட்களில் முல்லை என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சித்ரா. இவருடைய மரணம் இன்றும் யாராலும் நம்பவும் முடியவில்லை, ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதை பாதித்த ஒன்று. இவர் சாதாரண குடும்பத்தில் பிறந்து தன்னுடைய கடும் உழைப்பினாலும், விடா முயற்சியினாலும் இந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.

-விளம்பரம்-
chitra

விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சிக்கு பார்வையாளராக வந்த இவர் அதே சேனலில் பிரபலமான சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இப்படி புகழின் உச்சத்தில் இருந்த சித்ரா தூக்கிட்டு மர்மமான முறையில் இறந்த சம்பவம் பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சித்ரா அவர்கள் சீரியல் ஷூட்டிங்குக்காக பூந்தமல்லி அருகே பெங்களூரு பைபாஸ் சாலையில் அமைந்திருக்கும் ஹோட்டலில் தனது கணவர் ஹேமநாத்துடன் தங்கியிருந்தார். அப்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

- Advertisement -

சித்ராவின் மரணம்:

இவர் தற்கொலைக்கு முழுக்க முழுக்க காரணம் அவர் கணவர் ஹேமநாத் தான் என்று சித்ராவின் பெற்றோர்கள் புகார் அளித்து இருந்ததால் ஹேம்நாத்தை போலீஸ் கைது செய்து விசாரித்து இருந்தது. அதன் பின் அவர் ஜாமீனில் வெளியே வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சில மாதங்களுக்கு முன் தான் சித்ரா உடைய முதலாம் ஆண்டு நினைவு தினம் வந்து இருந்தது. இவர் இறந்து ஒரு ஆண்டு முடிந்துவிட்டது. ஆனால், இவருடைய திடீர் மரணத்திற்கு காரணம் என்ன? தற்கொலையா? கொலையா? அதற்கு காரணமானவர்கள் யார்? சித்ராவிற்கு நீதி கிடைத்ததா? என்று இன்னும் விடை தெரியாமல் இருக்கின்றது.

சித்ரா மரணம் குறித்து ஹேம்நாத் அளித்த பேட்டி:

இப்படி ஒரு சூழ்நிலையில் சித்ரா மரணத்திற்கு அரசியல்வாதிகள் தான் காரணம். என் உயிர்க்கும் ஆபத்து இருக்குது. எனக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை என்று ஹேமநாத் கூறியிருக்கிறார். இப்படி இவர் கூறியதை அடுத்து பலரும் பல்வேறு கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் கூட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விசாரணை நடத்துங்கள். எங்களுக்கு எந்த பயமும் இல்லை என்று பேட்டி அளித்து இருந்தார். இந்த நிலையில் சித்ரா இறப்பதற்கு முன் நடந்ததை முதன்முறையாக பேட்டியில் ஹேம்நாத் கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

சித்ரா இறப்பு குறித்து ஹேம்நாத் அளித்த பேட்டி:

அதில் அவர் கூறியிருப்பது, அன்று இரவு சூட்டிங் முடிந்து விட்டு ஒன்றரை மணி அளவில் சித்ரா ஹோட்டலுக்கு வந்திருந்தார். வரும்போது அவர் பல குழப்பத்தில் தான் வந்தார். ஆனால், அவர் ஹோட்டலுக்கு வருவதற்கு முன் என்னிடம் போனில் நன்றாக தான் பேசி, ஐ லவ் யூ மெசேஜ் எல்லாம் பண்ணி இருந்தார். எப்போதும் அவர் என்னை கட்டிப்பிடித்து பேசுவார். ஆனால், அன்று அவர் பிரச்சனையில் இருந்தார். இவருக்கு ஏற்கனவே தனிப்பட்ட பிரச்சனைகள், பணப்பிரச்சினை இருப்பது தெரியும். அதனால் நானும் அவர் மனதை புண்படுத்த விரும்பவில்லை என்று அமைதியாகிவிட்டேன். மேலும், அவர் பால்கனியில் ரோட்டை பார்த்துக் கொண்டு நின்று எதையோ யோசித்துக் கொண்டிருந்தார்.

chitra

சித்ரா இறப்புக்கு முன் நடந்தது:

நான் கூப்பிட்டும் அவர் அதை காதில் வாங்கவில்லை. எப்போதுமே நைட் சூட்லிருந்து வந்தால் குளித்து விடுவார். அதனால் அவர் குளிக்க சென்று இருந்தார். நான் வெளியே உட்கார்ந்து கொண்டிருந்தேன். 15 நிமிடங்களுக்கு மேலாகியும் அவர் வரவில்லை. என்ன ஆச்சு? என்று நான் கதவை தட்டினேன் திறக்கவில்லை. முனங்கல் சத்தம் மட்டும் கேட்டது. ஒரு வேளை சித்ரா அழுது கொண்டு இருக்கிறாளோ? என்று நான் நினைத்தேன். பிறகு உள்ளே போய் பார்த்தால் தூக்கில் தொங்கி இருந்தாள். நான் அப்படியே உறைந்து போய் விட்டேன். அதோடு சும்மா தான் இவள் விளையாடுகிறார் என்று நினைத்து கயிற்றை கழட்டினேன். முதல் உதவி செய்தேன். ஆனால், காப்பாற்ற முடியவில்லை என்று கூறியிருந்தார்.

Advertisement