உன்னால இப்படி போட வச்சிட்டயே – சித்ராவுடன் எடுத்த இறுதி புகைப்படத்தை பதிவிட்ட பிரியங்கா.

0
2933
chitra
- Advertisement -

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி படப்பிடிப்பை முடித்து விட்டு ஹோட்டலுக்கு சென்ற சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட போது அவருடன் அவரது கணவர் ஹேம்நாத் தான் தங்கி இருந்தார். ஹேம்நாத் அளித்த தகவலின் பெயரிலேயே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர். ஆனால், சம்பவத்தன்று என்ன நடந்தது என்பதை முன்னுக்கு பின்னாக ஹேம்நாத் கூறி வருவதாக தகவல்கள் வெளியானது.

-விளம்பரம்-

ஆனால், சித்ராவின் பிரேதபரிசோதனை முடிவின்படி சித்ராவின் மரணம் தற்கொலை தான் என்று உறுதி செய்யப்பட்டது. ஆனால். சித்ராவின் மரணத்திற்கு காரணம் அவரது தாயார் மற்றும் அவரது கணவர் கொடுத்த மன அழுத்தமே காரணம் என்றும் போலீசார் தெரிவித்தனர். சித்ராவின் மரணத்தை அடுத்து அவரது கணவர் ஹேம்னாத்திடம் பல நாட்களாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் கடந்த டிசம்பர் 14 சித்ராவின் மரணம் குறித்து இரு தரப்பினரையும் விசாரிக்க ஆர்.டி.ஓ. வுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.இந்த விசாரணைக்கு பின் பேசிய சித்ராவின் தாயார், சித்ரா என்னிடம் தான் பேசினார் ஸ்டார்ட் மியூசிக்கில் இருப்பதாக சொன்னதாக கூறி இருந்தார். மேலும், சித்ரா விஷயத்தில் தற்கொலைக்கு தூண்டியதாகஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் சித்ரா இறுதியாக கலந்து கொண்ட ஸ்டார்ட் மியூசிக் செட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பிரியங்கா பதிவிட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பிரியங்கா, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் சித்ராவுடன் இருந்த புகைப்படம் ஒன்றை ஷேர் செய்து ‘இந்த சந்தோஷமான புகைப்படத்தை இப்படி ஷேர் செய்வேன் என எதிர்ப்பார்க்கவில்லை. இதெல்லாம் உன்னால் தான் செய்கிறேன் என சித்ரா’ என பதிவு செய்துள்ளார் பிரியங்கா. இது ஒருபுறம் இருக்க நடிகை சித்ரா நடித்து வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நாளை தான் சித்ராவை ரசிகர்கள் இறுதியாக காண முடியும். அதன் பின்னர் சித்ரா நடித்து வந்த முல்லை கதாபாத்திரத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை காவ்யா தான் நடிக்க இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement