சித்ராவின் ரசிகர்கள் அவனை அடித்துக்கொள்ளுங்கள் -பேட்டியில் கதறிய சித்ராவின் தாயார்

0
2445
chitra
- Advertisement -

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். நேற்று 2:30 மணி அளவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சித்ரா, தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றுள்ளார். மேலும் இதே ஹோட்டலில்தான் சித்ராவை நிச்சயதார்த்தம் முடித்த ஹேமந்த் தங்கியிருக்கிறார். சித்ரா ஹோட்டலுக்கு சென்ற போது தான் குளித்து விட்டு வருகிறேன் அதனால் வெளியே செல்லுங்கள் என்று ஹேமந்த்திடம் கூறியதாகவும் பின்னர் ஹோட்டல் அறையின் வெளியே நின்று கொண்டிருந்த ஹேமந்த் உள்ளே சென்ற சித்ரா நீண்ட நேரம் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியரை அழைத்து வேறு ஒரு சாவியை போட்டு அறையை திறந்து பார்த்தபோது சித்ரா தூக்கிவிடும் தங்கி இருந்ததாக கூறியிருந்தார் இதையடுத்து சித்ராவின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணையை துவங்கினர்.

-விளம்பரம்-

சித்ரா மற்றும் ஹேமந்த்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் திருமண நிச்சயதார்த்தம் இருவீட்டார் சம்மதத்துடன் நடைபெற்றது. ஆனால், சித்ராவின் மரணத்திற்கு பின்னர் அவரிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தங்களுக்கு அக்டோபர் மாதமே பதிவு திருமணம் முடிந்து விட்டதாக கூறி பலருக்கும் ஷாக் கொடுத்தார் ஹேமந்த். அதேபோல சித்ராவின் நெருங்கிய தோழியான ரேகா நாயர் கூறுகையில் சித்ரா ஹேமந்த் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவன் நல்லவன் கிடையாது அவனுக்கு ஏற்கனவே பல பெண்களுடன் தொடர்பு இருந்தது என்றும் கூறியிருந்தார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நடிகை சித்ராவின் உடல் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு கோட்டூர்புறத்தில் இருக்கும் அவரது வீட்டின் முன் வைக்கப்பட்டுள்ளது. சித்ராவின் இறப்பு குறித்து பேசிய அவரது தந்தை தனது மகள் மரணத்தில் தனது மருமகன் மீது சந்தேகம் இல்லை என்றும், அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்ற காரணத்தை காவல் துறை தான் கடுபிடிக்க வேண்டும் என்று பொறுப்பில்லாமல் கூறி இருந்தார். ஆனால், தனது மகளின் மரணம் குறித்து சித்ராவின் அம்மா பேசுகையில், தனது மகள் வலிமையான மனநிலை கொண்டவர் என்றும் அவளது மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கண்ணீர் மல்க தெரிவித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் சித்ரா வீட்டின் முன்பு பத்திரிகையாளர்கள் முன்பு பேசிய சித்ராவின் தாயார், என் மகளை அவன்தான் அடித்தே கொன்று விட்டான் செவ்வாய்க்கிழமை கூட நான் என் மகளுக்கு போன் செய்தேன் நான் படப்பிடிப்பில் இருக்கிறேன் அம்மா என்று சொன்னால் அவன் நல்லவன் என்று தான் அவனுக்கு பெண்ணை கொடுத்தோம் ஆனால் அவன் நல்லவன் கிடையாது என் மகளை அவன் தான் கொன்று இருக்கிறான் அவனை சும்மா விடக்கூடாது அவன் சாகவேண்டும் சித்ராவின் ரசிகர்கள் அனைவரும் அவனை அடித்தே கொள்ளுங்கள் என்று கதறினார். சித்ராவின் தாயார் இப்படி பேசிக்கொண்டு இருக்கும் போதே சித்ராவின் தந்தை அவரின் பேச்சை தடுத்து நிறுத்தினார். ஆனால், மற்ற அனைவரும் விடுங்க சொல்லட்டும் எல்லாருக்கும் தெரியட்டும் என்று கூறினார்கள்.

-விளம்பரம்-
Advertisement