அரசியல்வாதிகளுடன் தொடர்பு, ஏற்கனவே மூன்று காதல், குடிப்பழக்கம் – சித்ரா குறித்து அடுத்தடுத்து ஷாக் கொடுத்த மாமனார்.

0
7959
chitra
- Advertisement -

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி படப்பிடிப்பை முடித்து விட்டு ஹோட்டலுக்கு சென்ற சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட போது அவருடன் அவரது கணவர் ஹேம்நாத் தான் தங்கி இருந்தார். ஹேம்நாத் அளித்த தகவலின் பெயரிலேயே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர். ஆனால், சம்பவத்தன்று என்ன நடந்தது என்பதை முன்னுக்கு பின்னாக ஹேம்நாத் கூறி வருவதாக தகவல்கள் வெளியானது.

-விளம்பரம்-

அதே போல சித்ராவின் உடலில் இருந்த ரத்த காயங்களை பார்த்து பலருக்கும் சந்தேகம் எழுந்தது. இதனால் ஹேம்நாத் தான் சித்ராவை கொலைசெய்து இருப்பார் என்றும் சர்ச்சை எழுந்தது. அதே போல சித்ராவின் தாயாரும், என் மகளை அவன் தான் அடித்தே கொன்று விட்டான் என்றும் கதறி இருந்தார். ஆனால், சித்ராவின் பிரேதபரிசோதனை முடிவின்படி சித்ராவின் மரணம் தற்கொலை தான் என்று உறுதி செய்யப்பட்டது. ஆனால். சித்ராவின் மரணத்திற்கு காரணம் அவரது தாயார் மற்றும் அவரது கணவர் கொடுத்த மன அழுத்தமே காரணம் என்றும் போலீசார் தெரிவித்தனர். சித்ராவின் மரணத்தை அடுத்து அவரது கணவர் ஹேம்னாத்திடம் நடைபெற்ற விசாரணையில் அவர் தற்கொலைக்கு தூண்டியதன் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

தனது மகன் கைது செய்யப்பட்ட பின்னர் பேட்டி அளித்த ஹேமந்த்தின் தந்தை, தன் மகன் எந்த தவறையும் செய்யவில்லை என்றும் யாரை காப்பாற்ற என் மகனை கைது செய்தார்கள் என்றும் கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகாரை அளித்துள்ளார். அந்த புகாரில், சித்ரா ஏற்கனவே மூன்று ஆண்களை காதலித்து உள்ளார். இதில் நிச்சயதார்த்தம் வரை சென்று சித்ராவின் திருமணம் நின்றதும் தெரியவந்துள்ளது. சித்ரா மது பழக்கத்திற்கு உள்ளானவர். விஜய் டிவியின் தொகுப்பாளர் ரக்‌ஷன் என்பவர் நெருக்கமான புகைப்படங்கள் எடுத்து வைத்து சித்ராவை மிரட்டியிருப்பதும் சமூகவலைதள செய்திகள் மூலம் எனக்கு தெரிய வருகிறது.

ஒரு சில எண்களில் இருந்து அழைப்பு வந்தால் சித்ரா பதட்டத்துடன் தனியாக சென்று பேசுவார் என்றும் பின்பு அந்த எண்களை அழித்து விடுவார் எனவும் ஹேம்நாத் என்னிடம் தெரிவித்திருக்கிறார். முக்கிய அரசியல்வாதிகளுடன் தினமும் மணிக்கணக்கில் சித்ரா பேசியிருக்கிறார். சித்ரா திருமணம் செய்தால் பல ஆதாரங்களை வெளியிட்டு திருமணத்தை நிறுத்தவும் தயராக உள்ளதாக பல செய்திகள் வந்ததாக ரவிச்சந்திரன் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.சித்ரா டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் உள்ளார் என்பதால் அவருக்கு முதலீடு செய்த மற்றும் பழக்கம் உள்ள பெரிய நபர்கள் சினிமா நபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அவருடன் தொடர்பில் இருந்துள்ளனர். சித்ராவுக்கு திருமணம் நடந்தால் அந்த பிரபலம் குறையத் தொடங்கிவிடும் என்பதால் ஒரு சில நபர்கள் மிரட்டல் விடுத்திருக்கலாம் என எனக்கு சந்தேகம் இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளாராம். மேலும்,

-விளம்பரம்-
Advertisement