35 வயசுல ஸ்கூல் டிரஸ்ல நடிக்கறாங்க அவங்கள கேளுங்க.! யாரை சொல்கிறார் ஜாக்குலின்.!

0
20250
Jackline

விஜய் தொலைக்காட்சியில் விஜேவாக பணிபுரிந்தவர்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பணி புரிந்தவர்கள் பலருக்கும் விஜய் டிவி தொலைக்காட்சி சீரியல் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அந்த வகையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் விஜேவாக பணியாற்றி வந்த ஜாக்குலின் தற்போது புதிய தொடர் ஒன்றில் நடித்து வருகிறார்.

ஜாக்குலின்

கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்தவர் ஜாக்குலின். அதன் பிறகு, நயன்தாராவின் தங்கையாக `கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். சினிமாவிலே நடித்திருந்தாலும் சீரியலில் நடிக்கும் ஆசையும் ஜாக்குலினுக்கு இருந்தது. அந்த ஆசையை `தேன்மொழி பி.ஏ’ என்கிற புது சீரியலின் மூலம் நிறைவேற்றிக்கொண்டார். 

இதையும் பாருங்க : பிக் பாஸ் காரில் வாயில் சிகிரெட்டுடன் இருக்கும் மீரா மிதுன்.! சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்.! 

- Advertisement -

இந்த தொடர் குறித்து பேசிய ஜாக்குலின், இந்த சீரியலுக்கான புரோமோ ஷூட் வித்தியாசமா இருந்தது. ஒவ்வொரு ஷாட்டும், நல்லா இருக்குனு சொன்னதும், எனக்கு இன்னும் சந்தோஷமாகிடுச்சு. அதுக்கப்புறம் சீரியலுடைய சில எபிசோடுகளைப் பார்த்தேன். மனசுக்கு ரொம்ப நெருக்கமாகிடுச்சு. அடுத்த நாளே ஓ.கே சொல்லிட்டேன். காஸ்டியூம் போட்டப் பிறகு இன்னும் ஆத்மார்த்தமா உணர ஆரம்பிச்சிட்டேன்

jakquline

சீரியலுடைய ஆரம்பத்துலேயே கல்யாண கெட்டப்ல நடிக்கிறீங்க… வெளியில என்ன பேசிக்கிறாங்க என்று கேள்வி கேட்கப்பட்டதுக்கு, சில நடிகைகள் 35 வயசுலகூட ஸ்கூல் டிரெஸ் போட்டு நடிக்கிறாங்க. அவங்ககிட்ட இந்தக் கேள்வியை கேட்க முடியாதுல்ல. எனக்கு 23 வயசாகிடுச்சு. கல்யாண பொண்ணா நடிக்கிறதுல என்ன தப்பு. பிச்சைக்காரியா நடிக்கச் சொன்னாலும் எந்தத் தயக்கமும் இல்லாம நடிப்பேன் என்று கூறியுள்ளார். இதனால் ஜாக்குலின் த்ரிஷவை சொல்லிறாரா இல்லை சமந்தாவை சொல்லிறாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement