தொலைக்காட்சிகளில் வரும் தொகுப்பாளர்கள் சிலர் தான் ரசிகர்கள் மனதில் என்றென்றும் நீங்காத இடத்தை பிடித்து வருவார்கள். அந்த வகையில் பிரபல பெண் தொகுப்பாளினியான பல ஆண்டு காலமாக ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் மகேஸ்வரி. இவர் வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். இவர் முதலில் விஜேவாக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். பின் 90’ஸ் கிட்ஸ் முதல் 2k கிட்ஸ் வரை நினைவில் வைத்திருக்கக் கூடிய விஜேக்களுள் ஒருவர் ஆனார். மேலும், மகேஸ்வரி தன் எத்துப்பல் சிரிப்பாலும், க்யூட்டான பேச்சாலும், அதிகமான இளைஞர்களை தன் வசம் ஈர்த்தார்.
இடையில் இவர் திருமணம் ஆனதால் மகேஸ்வரி மீடியாவில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்டார். இவருடைய முதல் திருமணம் சில காரணங்களால் விவாகரத்து வரை சென்று பிரிந்தது. தற்போது மகேஸ்வரி ஒரு சிங்கள் மதராக இருக்கிறார். மேலும், விவாகரத்துக்கு பின் இவர் தாயுமானவன், புதுக்கவிதை போன்ற ஒரு சில சீரியல்களில் கூட நடித்திருக்கிறார். அதோடு குயில், மந்திர புன்னகை, சென்னை 28 -2 போன்ற படங்களில் நடித்து உள்ளார்.
விவாகரத்து குறித்து பேசிய மகேஸ்வரி :
இறுதியாக கமலின் விக்ரம், சமுத்திரகனியின் ரைட்டர் போன்ற படங்களில் நடித்து இருந்தார். இந்நிலையில் மகேஸ்வரி அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் தன்னுடைய விவாகரத்து குறித்து பேசுகையில் ’10 வருடத்திற்கு மேலாக நான் சிங்கிளாக தான் இருக்கிறேன். சொல்லும்போது சந்தோஷமா இருக்கிறது. நானும் ஒரு மனிதர் தான். எல்லாருக்குமே ஒரு தேவை இருக்கு. நானும் நிறைய பீல் பண்ணி இருக்கிறேன். யாராவது கை கோர்த்து போகும் போது நமக்கும் ஒரு ஆள் இருந்தால் நல்லா இருக்குமே? நமக்கு தான் வாழ்கை சரியா அமையவில்லையோ? இது தான் நம் தலையில எழுதி இருக்கும் தலையெழுத்து அப்படின்னு சொல்லிட்டு போயிடுவேன்.’
மகேஸ்வரி விவாகரத்துக்கு காரணம்:
எனக்கு கல்யாணம் ஆகி ஒரு வருடத்திலேயே பிரிந்துவிட்டோம். பின் என் குழந்தையை சரியாக வளர்க்கணும் என்ற பொறுப்பு எனக்கு வந்தது.என் கணவரும் அவரது வீட்டில் இருந்தவர்களும் என்னை அடிமை போல நடத்தினார்கள். ஆண் நண்பர்களுடன் பழகக் கூடாது, சீடர்களில் நடிக்க கூடாது என்றெல்லாம் நிபந்தனைகள் விதித்தார்கள். சீரியலில் நடித்தால் குடும்பம் மானம் போய்விடும் என்று என்னை கொடுமைப்படுத்தினார்கள். அதுமட்டுமின்றி என்னுடைய அம்மாவிற்கு செய்த சிறு சிறு உதவிகளை கூட செய்யக்கூடாது என்று சொன்னார்கள்.
வீட்டு வேலைக்கு செல்ல இருந்த அம்மா :
இதனால் என் அம்மா வீட்டு வேலைக்கு செல்ல முடிவெடுத்தார். என்னை கஷ்டப்பட்டு வளர்த்த என் அம்மாவை எப்படி நான் வீட்டு வேலைக்கு அனுப்ப முடியும்? பல நேரங்களில் ஏன் நமக்கு மட்டும் சரியான வாழ்க்கைத்துணை அமையவில்லை? என்று நிறைய முறை வருத்தப்பட்டு இருக்கிறேன். என்னால் அடுத்து சரியான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை. நமக்குன்னு ஒரு துணையாக இருப்பார் என்று நினைத்தேன். ஆனால், எனக்கு அது அமையவில்லை.
இரண்டாம் திருமணம் :
நிறைய பேர் அட்ஜஸ்ட் பண்ணி போக வேண்டியதுதான் என்று சொன்னார்கள். இந்த அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் விடுபட விவாகரத்து முடிவை எடுத்தேன் விவாகரத்திற்கு பின்னர் தற்போது நிம்மதியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும், இரண்டாம் திருமணம் குறித்து பேசிய போது ‘வரப்போகிறவர் என் பையனை ஏற்றுக்கொள்ளனும். என் பையன் தான் எனக்கு ரொம்ப முக்கியம். என்னை நம்பி தான் அவன் அந்த உலகத்திற்கு வந்து இருக்கிறான். அதனால் அதை எல்லாம் யோசித்து தான் இரண்டாம் திருமணம் பண்ணுவேன். அதோடு எனக்குள் ஒரு பயம். இன்னொரு கல்யாணம் பண்ணால் கடைசிவரையும் அது சரியா வருமா? இல்லையா? என்ற ஒரு பயம் எனக்குள் இருக்கு’ என்று கூறியுள்ளார்.