அசீம் மாதிரி கேவலமா பேசுறதுக்கு வெளிய வந்ததே பெட்டர் – ஓப்பனாக பேசிய Evicted போட்டியாளர்.

0
285
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 87 நாட்களை கடந்து இருக்கிறது. மேலும், இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ஜி.பி.முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, அமுதவனான்,ரச்சிதா,Adk என்று 8 பேர் மட்டும் விளையாடி வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த சீசனில் ஆரம்பம் முதலே ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வருவது அசீம் தான். இதுவரை பல முறை நாமிநேஷனில் வந்த போதிலும் ஒவ்வொரு முறையும் நாமிநேஷனில் வாக்குகளை பெற்று காப்பாட்றப்பட்டு வருகிறார். என்பதான் இவர் ஆக்ரோஷமாக விளையாடி வந்தாலும் இவர் தான் பிக் பாஸ் வீட்டில் உண்மையாக தனது குணங்களை காண்பித்து வருகிறது என்று சிலர் இவருக்கு ஆதரவும் தெரிவித்து தான் வருகின்றனர்.

- Advertisement -

ஆனால், அடிக்கடி எதாவது பேசி சர்ச்சையில் சிக்கிகொள்வதை வாடிக்கையாக வைத்து வருகிறார் அசீம். அதுவும் ஆரம்பம் முதலே விக்ரமனிடம் தான் இவருக்கு அடிக்கடி சண்டை வெடித்திக்கொண்டே தான் வாரா வாரம் விக்ரமன் மற்றும் அசீம் ஆகிய இருவருக்கும் எதாவது ஒரு சண்டை வெடித்து கொண்டு தான் இருக்கிறது. அதிலும் அசீம் தன்னை கதாநாயகனாக காட்டிக்கொள்ள மற்றவர்களை அவமானப்படுத்தி, அநாகரிகமாக திட்டுவதுமாக இருந்து வருகிறார்.

வாராவாரம் திட்டுவாங்கும் அசீம் :

அதே போல வாரம் 6 நாட்கள் சண்டை போடுவது பின்னர் வாரத்தின் கடைசி நாளில் கமலஹாசனிடன் தீட்டு வாங்குவது என இருந்து வருகிறார் அசீம். மேலும் அசீம் தன்னுடைய குணத்தை ஆயிஷாவுடன் இருந்து காட்டி வீட்டில் உள்ள எல்லா போட்டியாளர்களிடமும் அநாகரீகமாக நடந்து வருகிறார். உதாரணமாக ராஜ வம்சம் டாஸ்கில் உங்களுடைய சாப்பாட்டில் காரி துப்பி கொடுக்கிறேன் சாப்பிடுங்கள் என்று சொன்ன போது அவருக்கு கமலஹாசன் ரெட் கார்டு கொடுப்பர் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அசீமை விமர்சிப்பதோடு மட்டும் இருந்து வருகிறார் கமல்.

-விளம்பரம்-

விஜே மகேஷ்வரி :

ஆனால் அசீம் செய்யும் அட்டூழியங்களை விக்ரமன், ஷிவின் போன்றவர்கள் தொடக்கத்தில் இருந்து தட்டி கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர். அதிலும் விக்ரமன் மற்றும் அசீம் சண்டைகள் வாராவாரம் நடந்து கொண்டுதான் வருகிறது. ஆனால் பிக் பாஸ் தொடக்கத்தில் அசீமுடன் அதிக வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் விஜே மஹேஸ்வரி. இவர் பிக் பாஸ் வீட்டில் வலிமையான போட்டியாளராக இருந்து கொண்டிருந்த நிலையில் இவர் வெளியேறியது பிக் பாஸ் செய்த சதி என்று பலரும் கூறியிருந்தனர்.

கேவலமான ஆள் அசீம் :

இந்த நிலையில் சமீபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மகேஸ்வரியுடம் அசீம் பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது `அசீம் போல மற்றவர்களை கேவலமாக பேசினால்தான் பிக் பாஸ் வீட்டில் இருக்க வேண்டுமென்றால் அதில் இருந்து வெளியேறியதே எனக்கு மகிழ்ச்சி. இவ்வளவு மோசமான மனநிலை கொண்ட ஒருவரை கண்மூடி தனமாக சில நம்பிக்கொண்டு அதிரவளிக்கின்றனர் என்று வெளிப்படையாக கூறியிருந்தார். பிக் பாஸ் சீசன்6 முடிவடையும் நிலையில் அசீம், ஷிவின், விக்ரமன் இவர்கள் மூவரில் ஒருவருக்கு வெற்றி கிடைக்கும் என்று ரசிகர்கள் கூறிவரும் நிலையில் பிக் பாஸ் கோப்பையை கண்டிப்பாக அசீமிற்கு கொடுக்கக் கூடாது என்று நெட்டிசங்கள் பலரும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement