தன்னை பங்கமாக கலாய்த்த நடிகரின் படத்திலேயே நடிகையாக அறிமுகமான vj பார்வதி.

0
2305
parvathy
- Advertisement -

தற்போது இருக்கும் காலகட்டத்தில் டிவி தொகுப்பாளினிகளுக்கு இணையாக யூடுயூப் தொகுப்பாளர்களும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில் தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தவர் விஜவும் தொகுப்பாளினியுமான Vj பார்வதி. இவர் கலாட்டா என்ற தனியார் யூடியூப் சேனலில் ஜாக்கி ஆக பணிபுரிந்தார். இவர் விஜே மட்டுமில்லாமல் மாடல் மற்றும் ஜர்னலிஸ்ட் ஆவார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்துக்கும் மேலாக ஃபாலோவர்ஸ் உள்ளார்கள்.

-விளம்பரம்-

பார்வதி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது என்னவோ ஹிப் ஹாப் ஆதி மூலம் தான். கடந்த ஆண்டு ஹிப் ஹாப் நேர்காணல் கொடுத்து இருந்தார். அந்த நிகழ்ச்சியை ஆர்.ஜே.பார்வதி அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். இதில் ஹிப் ஹாப் தமிழா ஆதி அவர்கள் தன்னுடைய பழைய நினைவுகள் விஷயங்களையும், நடந்திருக்கும் விஷயம் , எதிர்காலத்தில் நடக்கும் விஷயம் என பல விஷயங்களைப் பற்றியும் அவர் பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

அப்போது பார்வதி அவர்கள் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஆண்ட்டி(aunty) பார்த்து சைட் அடித்து இருக்கிறீர்களா?? என்று கேட்டார். ” உங்களைப் பார்ப்பதுக்கு முன்னாடி வரை யாரும் இல்லை” என்று சொன்னார். இதனால் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோவை போட்டு பல மீம்ஸ்களை போட்டு வந்தனர். அப்போது முதல் இவரை பலரும் ஆன்டி என்று தான் அழைத்து வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் பார்வதி சினிமாவில் நடிகையாக களமிறங்கி இருக்கிறார். அதுவும் ஹிப் ஹாப் தமிழா படத்திலேயே. ஒரே சமயத்தில் நடிகராகவும், இயக்குநராகவும் ஹிப் ஹாப் தமிழா அறிமுகமான படம் ‘மீசைய முறுக்கு’. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. 2017-ம் ஆண்டு இந்தப் படத்துக்குப் பிறகு ஹிப் ஹாப் தமிழா படம் எதுவும் இயக்கவில்லை.தற்போது மீண்டும் இயக்குநராக களமிறங்கியுள்ளார் ஹிப் ஹாப் தமிழா. சிவகுமாரின் சபதம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நாயகனாகவும் நடித்துள்ளார். சத்யஜோதி நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

-விளம்பரம்-
Advertisement