சூர்யாவை புறக்கணித்ததால் கடுப்பான ரசிகர்கள் – பஞ்சாயத்து செய்த சூர்யா ரசிகர் மன்ற ஒருங்கிணைப்பாளர்.

0
2163
parvathi
- Advertisement -

தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தவர் விஜே பார்வதி. இவர் கலாட்டா யூடியூப் சேனலில் ஜாக்கி ஆக பணிபுரிந்தார். இவர் விஜே மட்டுமில்லாமல் மாடல் மற்றும் ஜர்னலிஸ்ட் ஆவார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்துக்கும் மேலாக ஃபாலோவர்ஸ் உள்ளார்கள். Vj பார்வதி பல்வேறு பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார்.

-விளம்பரம்-

அது போக பல பொது மக்கள் கருத்து கேட்கும் நிகழ்ச்சிகளில் கூட தொகுப்பாளராக இருந்துள்ளார். இப்படி ஒரு நிலையில் Vj பார்வதிக்கும் சூர்யா ரசிகர்களுக்கும் இடையே ஒரு பனிப்போர் நிலவியது. அதற்கு காரணம் ஜோ மைக்கேலுடன் இவர் எடுத்து பேட்டி தான். ஜோ மைக்கேல் வேறு யாரும் இல்லை அடிக்கடி மீரா மிதுனை கழுவி ஊற்றி அவரின் முகத்திரையை முதன் முதலில் கிழித்தவர் தான்.

- Advertisement -

கடந்த சில நாட்களாக மீரா மிதுனின் சர்ச்சை தான் சமூக வலைதளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. அதிலும் மீரா மிதுன் விஜய் மற்றும் சூர்யா குறித்து பேசிய கருத்துக்கள் பேசும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் மீரா மிதுன் குறித்து ஜோ மைக்கேலை பேட்டி எடுத்தார் Vj பார்வதி. அந்த பேட்டியின் போது விஜய்யை தளபதி என்று குறிப்பிட்ட பார்வதி சூர்யாவை அந்த நடிகர் என்று குறிப்பிட்டார்.

https://twitter.com/8700_v/status/1291315901862563840

மறுமுனையில் இருந்த ஜோ மைக்கேல், அது என்ன அந்த நடிகர் அவரின் பெயரை சொல்லலாமே என்று சொன்ன போதும் பார்வதி , சூர்யாவின் பெயரை சொல்லவில்லையாம். இதனால் தான் சூர்யாவின் ரசிகர்கள் பார்வதியை சமூக வலைதளத்தில் திட்டி தீர்த்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த விஷயம் குறித்து அனைத்திந்திய சூர்யா ரசிகர்களின் ஆன்லைன் ஒருங்கிணைப்பாளர் ஹரி என்பவர் பார்வதியை போனில் தொடர்பு கொண்டதாக பார்வதி கூறியுள்ளார்.

-விளம்பரம்-

இதுகுறித்து தெரிவித்துள்ள பார்வதி, என்னுடைய பேட்டிகளில் நான் சூர்யாவை புறக்கணிப்பதாக ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஆனால், அது அப்படி எதுவும் கிடையாது. நான் அவரின் திரைப்படத்திற்கும் அவரின் சமூக சேவைக்கும் மிகப்பெரிய ரசிகை. அவரைப் பேட்டி காண நான் காத்துக் கொண்டிருக்கிறேன். நான் இதை வேண்டுமென்றே செய்யவில்லை என்று விளக்கமளித்துள்ளார்.

Advertisement