நீயும் தான இப்படி கேட்ட உன்ன ஏன் அரெஸ்ட் பண்ணல் – ரசிகர்கள் தொல்லையால் பார்வதி அளித்த பதில்.

0
1671
Vjparvathy
- Advertisement -

பெண்களிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்து வீடியோ வெளியிட்டதற்காக Chennai Talks என்ற யூடியூப் சேனலை சேர்ந்த மூன்று பேரை கைது செய்ததை போன்று பார்வதியையும் கைது செய்ய வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தவர் விஜே பார்வதி. இவர் கலாட்டா யூடியூப் சேனலில் ஜாக்கி ஆக பணிபுரிந்தார். இவர் விஜே மட்டுமில்லாமல் மாடல் மற்றும் ஜர்னலிஸ்ட் ஆவார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்துக்கும் மேலாக ஃபாலோவர்ஸ் உள்ளார்கள்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் பார்வதியை கைது செய்ய வேண்டும் என்று ஒரு சிலர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதற்கு முக்கிய காரணமே, சமீபத்தில் பெண்களிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்து வீடியோ வெளியிட்டதற்காக Chennai Talks என்ற யூடியூப் சேனலை சேர்ந்த மூன்று பேரை கைது செய்யப்பட்டது தான் காரணம். இதே போன்று பார்வதியும் பலரிடம் ஆபாசமாக பேட்டி எடுத்துள்ளதாகவும் எனவே, அவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் சமூக வலைதளத்தில் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து பார்வதி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு தனியார் யூடுயூப் சேனலில் பெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்ததர்க்காக மூன்று பேரை கைது செய்துள்னனர். இந்த செய்தி கேட்டதும் ஏன் நீங்க தான் கைது என்று மீம் போட்டு என்னை டேக் செய்கிறீர்கள். நான் மத்த யூடுயூப் வேனலில் கேட்பது போல கீழ்தரமான கேள்விகளை கேட்டது கிடையாது. எனவே, இதையெல்லாம் நிறுத்துங்கள் என்று கூறி இருந்தார் பார்வதி.

இருப்பினும் பார்வதியை கைது செய்ய வேண்டும் என்றும் பலரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தான் கைது செய்யப்படவேண்டும் என்று ஒரு சிலர் தனக்கு அனுப்பிய மெசேஜ்களுக்கு பார்வதி பதில் அளித்துள்ளார். அதில், ஒருவர் நீ மட்டும் ஏன் அரசஸ்ட் ஆகல நீயும் தான் அந்த மாதிரி கேள்வி கேப்பைக் உன்ன மட்டும் ஏன் விட்டாங்க பொண்ணு எல்லாம் தப்பு செய்யலாம் ஏதும் பண்ண மாட்டாங்க நாங்க பண்ணா அரஸ்டா என்று கேட்டதற்கு,சென்னை டாலக்ஸ் காசு கொடுத்து பெண்களை பேச வைத்துள்ளார்கள். அது தண்டிகப்பட வேண்டிய குற்றம் . அந்த பெண் பாதிகப்பட்டவள். அந்த பசங்க தான் குற்ற வாளிகள் அதை புரிந்துகொள்ளுங்கள். இதில் ஆண் பெண் என்பது கிடையாது என்று பதில் அளித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement