பார்வதினாலே இப்படி தான்னு நெனச்சிட்டு இருகாங்க, அதானல தான் Survivorல கலந்துகிட்டேன்.

0
1561
survivor
- Advertisement -

சமீபகாலமாகவே ஒவ்வொரு சேனலும் தங்களின் சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக புதுப்புது வித்தியாசமாக நிகழ்ச்சிகளைக் கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சி செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் சர்வைவர் என்ற ஒரு ரியாலிட்டி ஷோவை ஒளிபரப்புகிறார்கள். வெவ்வேறு குணாதிசியங்கள் நிறைந்த மனிதர்களை சவால்கள் நிறைந்த ஓரிடத்தில் ஒன்று சேர்த்த பிறகு அவர்கள் கொடுக்கும் சவால்களை கடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்ட ரியாலிட்டி நிகழ்ச்சி தான் சர்வைவர்.

-விளம்பரம்-

மேலும், ஜான்சிபார் எனப்படும் டான்சானியா தீவு ஒன்றில் போட்டியாளர்கள் தங்கியிருக்க அங்கிருந்து ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் சர்வைவர். நடிகர் அர்ஜுன் முதல் முறையாக தொகுப்பாளராக இந்த நிகழ்ச்சி மூலமாக அறிமுகமாகிறார். சவால்கள் நிறைந்த தனித்தீவில் 18 போட்டியாளர்களை களம் இறக்கி விடுவார்கள். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் யூடியூப் பிரபலம் பார்வதி கலந்து கொள்கிறாராம்.

இதையும் பாருங்க : என்னிடமிருந்து மிரட்டி வாங்கப்பட்ட பையனூர் பங்களாவை மீட்டுக்கொடுங்க – முதல்வருக்கு கங்கை அமரன் கோரிக்கை

- Advertisement -

மேலும், இவரிடம் இந்நிகழ்ச்சி குறித்து பேசியபோது அவர் கூறியது, நானே ஒரு பெரிய சைக்கோ. எந்த நாடாக இருந்தாலும் சரி அந்த 18 பேரை சமாளிக்க மாட்டேனா என்ன! இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. பொதுவா என்ன பத்தி என்ன அபிப்பிராயம் இருக்குன்னா, இந்த பொண்ணு 18 பிளஸ்ல தான் கேள்வி கேட்பா என்று ஒரு கான்செப்டை உருவாக்கிட்டாங்க. ஆனால், இந்த சர்வையர் நிகழ்ச்சி மூலம் என்னுடைய கேரக்டர் என்னன்னு மக்களுக்கு புரியும்.

அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு என்னுடைய ஆட்டிடியூட் ஏத்த மாதிரி இருக்கு என்பதால் தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. இதுவரை எத்தனை பேரை மேனேஜ் பண்ணி இருக்கேன் அதனால பாத்துக்கலாம் என்று சொல்லிவிட்டு நிகழ்ச்சிக்காக கிளம்பிக் கொண்டிருந்தார். மேலும், இவர் ஏற்கனவே தனியாக இமாலயாவுக்கு போயிருக்கிறாராம். அந்த அனுபவம் இதற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று சொல்லி இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement