உருவக் கேலி செய்த நெட்டிசன்களுக்கு Vj பார்வதி தக்க பதிலடி கொடுத்துள்ளார். தற்போது இருக்கும் காலகட்டத்தில் டிவி தொகுப்பாளினிகளுக்கு இணையாக யூடுயூப் தொகுப்பாளர்களும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில் தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தவர் விஜவும் தொகுப்பாளினியுமான Vj பார்வதி. இவர் கலாட்டா என்ற தனியார் யூடியூப் சேனலில் ஜாக்கி ஆக பணிபுரிந்தார். இவர் விஜே மட்டுமில்லாமல் மாடல் மற்றும் ஜர்னலிஸ்ட் ஆவார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்துக்கும் மேலாக ஃபாலோவர்ஸ் உள்ளார்கள்.

பார்வதி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது என்னவோ ஹிப் ஹாப் ஆதி மூலம் தான். கடந்த ஆண்டு ஹிப் ஹாப் நேர்காணல் கொடுத்து இருந்தார். அந்த நிகழ்ச்சியை ஆர்.ஜே.பார்வதி அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். இதில் ஹிப் ஹாப் தமிழா ஆதி அவர்கள் தன்னுடைய பழைய நினைவுகள் விஷயங்களையும், நடந்திருக்கும் விஷயம் , எதிர்காலத்தில் நடக்கும் விஷயம் என பல விஷயங்களைப் பற்றியும் அவர் பகிர்ந்து கொண்டார்.

இதையும் பாருங்க : கண்டா வரச்சொல்லுங்க பாடலை தொடர்ந்து , தேவாவின் கான குரலில் வெளியான கர்ணன் படத்தின் அடுத்த பாடல்.

Advertisement

அப்போது பார்வதி அவர்கள் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஆண்ட்டி(aunty) பார்த்து சைட் அடித்து இருக்கிறீர்களா?? என்று கேட்டார். ” உங்களைப் பார்ப்பதுக்கு முன்னாடி வரை யாரும் இல்லை” என்று சொன்னார். இதனால் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோவை போட்டு பல மீம்ஸ்களை போட்டு வந்தனர். அப்போது முதல் இவரை பலரும் ஆன்டி என்று தான் அழைத்து வருகின்றனர்.

தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். இதற்கு நெட்டிசன் ஒருவர் ‘காசுக்கு,புகழுக்கு நீயும் காமிக்க ஆரம்பிச்சாசு போல’ என்று கமன்ட் செய்தார்.

Advertisement

இதற்கு பதில் அளித்த பார்வதி எவ்ளோ கேவலம் ? எப்படி நீங்கள் ஒருவரின் தனிப்பட்ட உடை குறித்து கேள்வி கேட்பீர்கள் ? அது வெறும் ஆடை தான். மேலும், நான் உண்மையாகவும் உறுதியாகவும் உணர்கிறேன். தீர்மானிக்கும் உங்கள் எண்ணங்களை நிறுத்துங்கள் என்று பதில் கொடுத்துள்ளார். அதே போல இது கவர்ச்சி கிடையாது. என்ன அணிய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். ஒரு பெண் தன்னுடைய உடலையும், தோற்றத்தையும் கண்டறிவதற்கு அணைத்து உரிமையும் இருக்கிறது. இதில் ஆண்களுக்காக இல்லை, அவர்களுக்காக என்றும் கூறியுள்ளார்.

Advertisement
Advertisement