தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் என்ற உயிர் கொல்லி வைரஸ் தான் ஆட்டி படைத்து வருகிறது. பல்வேறு வல்லரசு நாடுகளும் இந்த வைரஸ் பாதிப்பால் பெரும் உயிர் சேதங்களை சந்தித்து வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல இந்தியா முழுதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பின் தொடரப்பட்டு வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு 21 நாட்கள் அமல்படுத்தி முடிவடையும் நிலையில், தற்போது கொரோனா தாக்கம் மேலும் பரவாமல் தடுக்க மீண்டும் சில மாநிலங்களில் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர். பஞ்சாப் மே 1ம் தேதி வரையும் மற்றும் ஓடிசா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கர்நாடகா, போன்ற மாநிலங்களில் வரும் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அம்மாநில அரசுகள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கிடையே, தமிழக அரசு நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 969 ஆக இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.மற்ற மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட உள்ள நிலையில் தமிழகத்தில் எப்போது ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.
ஊரடங்கு உத்தரவால் அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கிறது. அதில் அழகு நிலையம் மட்டும் விதிவிலக்கா என்ன? ஆனால் ஊரடங்கு முடிந்து விரைவில் அழகு நிலையத்தை திறக்க வேண்டும் என்று பிரபல தொகுப்பாளினியான ஒருவர் வீடியோ வெளியிட்டு புலம்பியிருக்கிறார். அது வேறு யாரும் இல்லை பிரபல தொகுப்பாளினி பார்வதி.
பார்வதி வேறு யாரும் இல்லை பிரபல மீடியா சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். ஆனால், இவர் பிரபலமானது என்னவோ ஹிப் ஹாப் ஆதியை நேர்காணல் செய்த போது தான். ஹிப் ஹாப் ஆதியை நேர்காணல் செய்த போது ஆண்டியை சைட் அடித்திருக்கிறீர்களா என்று பார்வதி கேட்க, அதற்கு ஹிப் ஹாப் ஆதி, . ” உங்களைப் பார்ப்பதுக்கு முன்னாடி வரை யாரும் இல்லை” என்று சொன்னார்.
இதையடுத்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோவை போட்டு பல மீம்ஸ்களை போட்டு பார்வதியை வைரலாக்கி விட்டார்கள். இந்த நிலையில் பார்வதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பியூட்டி பார்லர் இல்லாததால் மீசை எல்லாம் முளைத்து விட்டது. இப்படியே போனால் எல்லா பொண்ணுங்களும் மீசை தாடியோடு தான் சுத்தணும். அப்புறம் பொண்ணுங்க பொண்ணுங்கள தான் சைட் அடிப்பாங்க என்று வேடிக்கையாக புலம்பி தள்ளியுள்ளார் பார்வதி.