உடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிய பிரியங்கா.! ஷாக் ஆன ரசிகர்கள்.! புகைப்படம் உள்ளே

0
1303
priyanka

விஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள் . அதில் பிரபல தொகுப்பாளினி டிடிக்கு பிறகு அதிக ரசிகர்கள் கொண்ட ஒரு நபர் யார் என்றால் அது பிரியங்கா தான்.

priyanka vj

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி, சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகியாக இருந்து வருகிறார். கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் இவர் நடுவராக பங்கு பெற்று வருகிறார். இவரது பிரபலமே இவரின் சிரிப்பு தான், இவரின் சிரிப்புக்கு பல ரசிகர்களும் உள்ளனர்.

தற்போது விஜய் டிவியில் குழந்தைகள் பங்கு பெற்று வரும் “சூப்பர் சிங்கர்” என்ற பாடல் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பங்கு பெற்று வருகிறார். எப்போதும் இவரை தீனி பண்டாரம் என்று கிண்டல் செய்து வருகின்றனர். அதனை பற்றியெல்லாம் சிறிதும் கவலை படாமல், மற்றவர்கள் எவ்வளவு கலாய்த்தாலும் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்வார்.

vj priyanka

ஆனால், தற்போது தன்னை அப்படி கிண்டல் செய்த்தவர்களின் வாயை அடைக்கும் விதமாக சமீபத்தில் பிரியங்கா ஒரு புகைப்படத்தை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குண்டாக இருந்த தனது உடலை குறைத்து சற்று ஒல்லியாக மாறியுள்ளார். இதனை கண்டா ரசிகர்கள் “வாவ் பிரியங்கா சூப்பர்” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.