விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ பெண் தொகுப்பாளனிகள் வந்தாலும் ஒரு சில பெண் தொகுப்பாளினிகள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றனர். டிடிக்கு பின்னர் விஜய் டிவியில் பிரபலமானது ரம்யா தான். இவருக்கு பின்னர் தான் பாவனா, பிரியங்கா எல்லாம் வந்தார்கள். டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்றவர் தொகுப்பாளினி ரம்யா.
பின் டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழா என்று பல்வேறு விழாக்களில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். பின் ரம்யா அவர்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான மொழி திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அதன் பின்னர் ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி,ஆடை போன்ற பல படங்களில் நடித்து இருந்தார்.
இதையும் பாருங்க : படிக்காதவன் படத்தில் விவேக் கதாபாத்திரத்தில் முதலில் நடித்துள்ள வடிவேலு. அறிய புகைப்படம் இதோ.
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கிய ரம்யா, மேலும், இளைய தளபதி நடித்த மாஸ்டர் படத்திலும் நடித்து இருந்தார். சமீப வருடங்களாக இவரை விஜய் டிவியில் காண முடிவதில்லை, இதுகுறித்து சமீபத்தில் தெரிவித்த ரம்யா, அதைப்பற்றி எந்த ஒரு திட்டமும் இல்லை. நான் விஜய் டிவிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இதற்கு முன்னால் நான் பண்ணாத ஏதாவது ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி மூலம் மீண்டும் வரவேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறி இருந்தார்.
இப்படி ஒரு நிலையில் இவர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான சங்கத்தலைவன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது பிட்னஸ் வீடியோ, யூடுயூப் என்று படு பிஸியாக இருந்து வருகிறார். ரம்யாவை பற்றி இத்தனை விஷயங்கள் தெரிந்தாலும் அவருக்கு ஒரு அண்ணன் இருக்கிறார் என்பது பலரும் அறிந்திராத ஒன்று. அவருடைய பெயர் தீபக் சுப்ரமணியன். மருத்துவரான இவர் சென்னையில் ஒரு மருத்துவமனையை கூட வைத்து இருக்கிறாராம். இதோ அவரின் ஒரு சில புகைப்படங்கள்.