மாளவிகாவ விட ரம்யாவ ஹீரோயினா போட்டு இருக்கலாம் – ரசிகரின் டீவீட்டுக்கு ரம்யாவின் ரியாக்ஷன் (இவங்களுக்கு ஆச இருந்திருக்கு)

0
1218
ramya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ பெண் தொகுப்பாளனிகள் வந்தாலும் ஒரு சில பெண் தொகுப்பாளினிகள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றனர். டிடிக்கு பின்னர் விஜய் டிவியில் பிரபலமானது ரம்யா தான். இவருக்கு பின்னர் தான் பாவனா, பிரியங்கா எல்லாம் வந்தார்கள். டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்றவர் தொகுப்பாளினி ரம்யா. கடந்த 2007 ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான மொழி திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி,ஆடை போன்ற பல படங்களில் நடித்து உள்ளார். பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கிய ரம்யா, தற்போது இளைய தளபதி நடித்துள்ள மாஸ்டர் படத்திலும் நடித்து இருந்தார் ரம்யா.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

- Advertisement -

இந்த படத்தில் மாளவிகா, ஆண்ட்ரியா, ரம்யா, கௌரி கிஷன், சாந்தனு என்று பலர் நடித்திருந்தாலும் இவர்களுக்கு எல்லாம் படத்தில் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று நெட்டிசன்கள் பல மீம்களை போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த படத்தில் ரம்யாவிற்கு பெரிதான கதாபாத்திரம் இல்லை. இப்படி ட்விட்டர் ஒருவர் மாளவிகாவை விட ரம்யா அழகா இருகாங்க அவங்க ஹீரோயினா இருந்து இருக்கலாம் மாஸ்டர்ல என்று பதிவிட்டு இருந்தார்.

இதற்கு நெட்டிசன்கள் பலரும் கருத்துக்களை பதிவிட இந்த பதிவை லைக் செய்து உள்ளார் ரம்யா. சமீபத்தில் இவர் இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து இருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் எப்போதாவது படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளீர்களா என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த ரம்யா. ஆம், ஆனால் அந்த படத்தின் வாய்ப்பை இழந்ததற்க்காக நான் வருத்தப்படவில்லை. அதை ஏன் மறுத்தேன் என்றால் நான் என் உள் உணர்வையும் மனது சொல்வதையும் தான் கேட்பேன். எனவே, நான் சரியான முடிவை தான் எடுத்தேன் என்று நம்புகிறேன் என்று கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement