விஜே சித்துவை அவரது நண்பர் பொளக்கும் புது வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சோசியல் மீடியாவின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. சாதாரண மக்கள் தொடங்கி பிரபலங்கள் வரை எல்லோருமே சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் வித்தியாசமான வலைத்தளங்களை செயலிகளுமே அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் ஒன்றான யூடுயூப் பயன்பாடு தான் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்லோருமே தனியாக சேனலை தொடங்கி தங்களுக்கு விருப்பமான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் யூடியூப் சேனல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் விஜே சித்து. இவர் தினமும் நடக்கும் நிகழ்வுகளை யதார்த்தத்துடன், காமெடி கலந்த நக்கல் பாணியில் வீடியோக்களாக யூடியூப் இல் பதிவிட்டு வருகிறார்.
விஜே சித்து யூட்யூப் சேனல்:
இதனாலே இவர் சீக்கிரமாக தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி இருக்கிறார். இவரது சேனலை 40 லட்சத்துக்கும் அதிகமானோர் பாலோ செய்து வருகிறார்கள். இவர் வீடியோ ஜாக்கியாக தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார். அதற்குப் பின்னர் இவர் நிகழ்ச்சிகள் மற்றும் சமூக சேவை சார்ந்த வீடியோக்களெல்லாம் ரசிகர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டது. அது மட்டும் இல்லாமல் பிளாக் ஷீப் யூட்யூப் சேனலில் இவர் நிகழ்ச்சியை நடத்தி இருந்தார்.
விஜே சித்து குறித்த தகவல்:
இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு மிகப்பெரிய அளவில் பெயர் கிடைத்தது. அது மட்டும் இல்லாமல் இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமும் உருவாகியிருந்தது. அதனை தொடர்ந்து இவர் சமூக சேவை தொடர்பாக ‘சிந்தனை சேய் வித் சித்து’ என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியிருந்தார். அதற்குப் பின் 2019 ஆம் ஆண்டு ஜெயா டிவியில் ‘கில்லாடி ராணி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் தொலைக்காட்சியில் அறிமுகமானார்.
விஜே சித்து வீடியோ:
அதற்குப்பின் இவர் தனியாக விஜே சித்து வ்லாக்ஸ் என்று யூடியூப் சேனல் தொடங்கி பல வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இவருடைய வீடியோ எல்லாம் மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் பார்த்து வந்தார்கள். இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி விஜே சித்து வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், தனது நண்பர்களுடன் ‘நக்கல்- குந்தல்’ என்னும் 90ஸ் கிட்ஸ்களின் விளையாட்டு விளையாடும் போது, நண்பர்களுக்குள் மாறி மாறி அடித்துக் கொள்கின்றனர். அப்போது விஜே சித்து ஒருவரை சராமாரியாக அடித்திருந்தார். அவருடைய நண்பர் சிரித்துக் கொண்டே அடி வாங்கி இருந்தாலும், இணையவாசிகள் விஜே சித்துவை கடுமையாக விமர்சித்து இருந்தார்கள்.
அடி வாங்கிய விஜே சித்து:
எனவே தனது வீடியோவுக்கு கண்டனங்களும், எதிர்மறை விமர்சனங்களும் எழுந்த நிலையில், பதறிப்போன விஜே சித்து, அந்த சர்ச்சைக்குரிய பகுதியை மட்டும் youtube வீடியோவில் இருந்து நீக்கியிருந்தார். அதை எடுத்து அண்மையில் அவரது நண்பர் சைஜுவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், ‘என்னம்மா கண்ணு சௌக்கியமா’, ‘என் கதை முடியும் நேரமிது’ போன்ற பாடல்கள் ஒலிக்க நண்பர் ஒருவர் சித்து வை அடிக்கிறார். அவரும் அமைதியாக கைகட்டி நின்று கொண்டிருக்கிறார். இந்த புதிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், யாராக இருந்தாலும், அடிப்பது தவறு, இனியும் இது போன்ற செயல்களை விஜே சித்து தவிர்க்க வேண்டும் எனவும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.