பிஜிலி ரமேஷின் இறுதி அஞ்சலிக்கு விஜே சித்து வந்திருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக மக்கள் மத்தியில் அறியப்பட்டவர் பிஜிலி ரமேஷ். இவர் பிராங்க் வீடியோக்கள் மூலம் தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். அதுமட்டுமில்லாமல் இவர் ரஜினிகாந்த் உடைய தீவிர ரசிகர். அதன் பின் இவர் முதன் முதலாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருந்த கோலமாவு கோகிலா படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார்.
முதல் படமே இவருக்கு பெயரை வாங்கி தந்தது. அதனை அடுத்து இவர் நட்பே துணை, சிவப்பு மஞ்சள் பச்சை, கோமாளி, ஆடை, ஜாம்பி போன்ற பல படங்களில் நடித்திருந்தார். மேலும், இவருடைய நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதோடு இவர் சின்னத்திரை நிகழ்ச்சியில் கூட கலந்து இருந்தார். இப்படி சினிமாவில் நன்றாக வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு சமீபத்தில் நடிகர் பிஜிலி ரமேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தார்.
பிஜிலி ரமேஷ்
ஒரு வாரத்திற்கு முன்பு தான் இவர் வீடு திரும்பி இருந்தார். பின் இன்று தூக்கத்திலேயே இவர் இறந்திருக்கிறார். அதோடு கல்லீரல் பாதிக்கப்பட்டதால் மருத்துவர்கள் இவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் கூறினார்கள். ஆனால், அவருடைய உடல்நிலை மோசமாக இருந்தால் ஆபரேஷன் செய்ய முடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய இறப்பு பலருக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.
இறுதி அஞ்சலி:
தற்போது இவருக்கு 45 வயது தான். இவருடைய இறப்பிற்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் இரங்கலை தெரிவித்து இருக்கிறார்கள். நேற்று மாலை 5:00 மணிக்கு எம்ஜிஆர் நகரில் உள்ள அவருடைய வீட்டில் இறுதி சடங்கு நடந்தது. மேலும், பிஜிலி ரமேஷ் இறப்பு அவருடைய குடும்பத்தை ரொம்பவே பாதித்து இருக்கிறது. இந்நிலையில் பிஜிலி ரமேஷ் உடைய இறுதி சடங்கிற்கு விஜே சித்து நேரில் வந்து அவருடைய உடலைப் பார்த்து கதறி அழுது மரியாதை செலுத்தி இருந்தார்.
எல்லாமே கன்டன்ட் கிடையாது…🤬
— SandhiyaSAN (@sandhiyaTweets_) August 27, 2024
சில மீடியா வெறி நாய்கள் அப்படிதான் போல…
பழைச மறக்காம வந்த சித்து தங்கம்தான்..✨#BijiliRamesh #Vjsiddhu #SiddhuVlogs pic.twitter.com/74MCfChg4B
விஜே சித்து வீடியோ:
இதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த விஜே சித்து, அங்கு யாரோ ஒருவர் நான் கண்டெண்ட் கொடுக்க தான் வந்தேன். காலையில் இருந்து இங்கு இருப்பதற்கு காரணம் அது தான் என்றெல்லாம் சொல்லி இருந்தார்கள். அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நான் கண்டெண்ட் கொடுக்க வரவில்லை. ரொம்ப தப்பாக பேச வேண்டாம். குடிப்பழக்கத்தால் உடல்நிலை ரொம்ப மோசமாகி போகிறது. அதை விட்டு விட்டாலே பலருடைய வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று எமோஷனலாக பேசியிருந்தார்.
பிஜிலி ரமேஷ் மகன் பேட்டி:
இவரை எடுத்து பேட்டியில் பிஜிலி ரமேஷின் மகன், விஜே சித்து வரல, வரல என்று என்னுடைய அப்பா சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால், திடீரென்று ஒரு நாள் தென்கொரியாவில் இருந்து அப்பாவை பார்க்க விஜே சித்து வந்தார். அப்பாவை பார்த்து அவர் பணம் எல்லாம் கொடுத்து நீ நன்றாகி வா, உனக்கு ஒரு ஹோட்டல் வைத்து தருகிறேன் என்று சொன்னார் என்று பேசி இருக்கிறார்.