பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த உடன் ஹீரோவான விஜே விஷால் – ரொமான்டிக் ஹீரோவா, குவியும் வாழ்த்துக்கள்

0
164
- Advertisement -

பிக் பாஸ் விஷால் ஹீரோவாகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாக்கியலட்சுமி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி இருப்பவர் விஜே விஷால். இவர் முதன்முதலில் விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1 என்ற நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டார். அதன் பின் இவர் முதன்முதலாக கல்யாணமாம் கல்யாணம் என்ற சீரியலில் நடித்தார். அதை தொடர்ந்து இவர் அரண்மனைக்கிளி என்ற சீரியலில் நடித்து இருந்தார். அதன் பின் இவர் பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

இந்த சீரியல் மூலம் இவருக்கென்று ரசிகர் பட்டாளம் சேர்ந்து இருக்கிறது. பின் இவர் இந்த சீரியலில் இருந்து பாதியிலேயே விலகி விட்டார். அதன் பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து இருந்தார். இதன் பின் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வாய்ப்பு கிடைத்தது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 105 நாட்கள் நடந்து வெற்றிகரமாக சமீபத்தில் தான் முடிந்தது. இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி இருந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் 8:

இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி இருந்தது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

மேலும், இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக இந்த பணப்பெட்டி டாஸ்கை பிக் பாஸ் கொடுத்து இருந்தார்.
இந்த டாஸ்க்கில் ராயன், முத்துக்குமரன், விஷால், பவித்ரா ஆகியோர் வெற்றி பெற்று விட்டார்கள். ஆனால், ஜாக்குலின் தான் இந்த டாஸ்க்கில் தோல்வி அடைந்திருந்தார். இவரின் எலிமினேஷன் எல்லோருக்குமே பேரதிர்ச்சியாக இருந்தது. மேலும், அனைவரும் எதிர்பார்த்தபடி பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் பட்டத்தை
முத்துக்குமரன் தான் . இவரை அடுத்து இரண்டாம் இடத்தை சௌந்தர்யா, மூன்றாம் இடத்தை விஷால், நான்காம் இடத்தை பவித்ரா, ஐந்தாம் இடத்தை ராயன் வென்று இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

ஹீரோவாகும் விஷால்:

இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த கையோடு விஷாலுக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நினைத்திருக்கும் அதாவது, விஷாலுக்கு ஹீரோ சான்ஸ் கிடைத்திருக்கிறது. இவர் ஆல்பம் பாடல் ஒன்றில் தான் ஹீரோவாக நடித்திருக்கிறார். அந்த ஆல்பம் பாடலை சனோஜ் என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த ஆல்பம் பாடலில் விஷாலுக்கு ஜோடியாக அவந்திகா மிஸ்ரா நடித்திருக்கிறார்.

குவியும் வாழ்த்துக்கள்:

இந்த பாடலுக்கு விக்னேஷ் மகேந்திரன் என்பவர் தான் இசையமைத்திருக்கிறார். இந்த பாடலை சூப்பர் சிங்கர் பிரபலம் ஆதித்யா பாடியிருக்கிறார். தற்போது இந்த பாடலின் உடைய போஸ்டர் ரிலீஸ் ஆகிருக்கிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் ரவீந்திர் சந்திரசேகரும் விஷாலுக்கு வாழ்த்து கூறி, நீ எப்பவும் ஹீரோடா என்று பதிவு போட்டு இருக்கிறார்.

Advertisement