தமிழக தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக தமிழகத்தில் 49 பி முறையில் வாக்களித்த வாக்காளர்.!

0
1381
Sarkar-49p
- Advertisement -

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் பெரும் வெற்றியடைந்தது. மெர்சல் படத்தை போலவே இந்த படத்திலும் அரசியல் வாதிகளை கிழித்து தொங்கவிட்டனர். இதனால் சில அரசியல் கட்சிகளும் இந்த படத்திற்கு போர் கொடி தூக்கினர்.

-விளம்பரம்-

இந்த படத்தில் கள்ள ஒட்டு குறித்து பல விழிப்புணர்வு காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அதில் முக்கியமாக படத்தில் 49P என்ற இந்திய அரசியல் சாசன சட்டத்தை பற்றி மிகவும் அழுத்தமாக சொல்லபட்டுள்ளது. இந்த படத்திற்கு பின்னரே 49பி சட்டம் இருப்பது பலருக்கும் தெரிய வந்தது.

- Advertisement -

ஒருவர் ஓட்டை மற்றொருவர் கள்ள ஒட்டு போட்டுவிட்டால், 49 பி தேர்தல் விதிப்படி, தேர்தல் அலுவரின் உத்தரவின் பேரில் வாக்களிக்கலாம் என்ற நல்ல செய்தி மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்பட்டது.

இந்த நிகழ்வு தற்போது நெல்லை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. நெல்லை மாவட்டம் பணகுடி வாக்கு சாவடி எண் 48-ல் மணிகண்டன் என்பவர் ஓட்டை மற்றொருவர் கள்ள ஒட்டு போட்டதை தொடர்ந்து, மணிகண்டனுக்கு 49 பி தேர்தல் விதிப்படி வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

-விளம்பரம்-
Advertisement