""
-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

நயன் கணவர் விக்னேஷ் சிவன் ஒரு மிகப்பெரிய தியாகி – பாஜக துணை தலைவர் விமர்சனம்.

0
367
nayan
-விளம்பரம்-

நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் ஒரு மாபெரும் தியாகி என்று பாஜக துணை தலைவர் துரைசாமி விமர்சித்திருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் எதிர்பார்த்து காத்து இருந்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது. மேலும், திருமணம் முடிந்த கையுடன் இந்த தம்பதிகள் ஜோடியாக ஹனி மூன் சென்று இருந்தனர்.

-விளம்பரம்-

அதன் பின் இருவரும் தங்களுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தார்கள். இதுபற்றி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருமே தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்து இருந்தார். இதை தொடர்ந்து பலரும் வாழ்த்துக்களை கூறி இருன்டயர்கள்.

நயன்-விக்கி குழந்தை விவகாரம்:

ஆனால், பலர் கல்யாணம் முடிந்து 4 மாதங்கள் ஆன நிலையில் எப்படி நயன்தாரா குழந்தை பெற்றார்? என்று கேள்வி எழுப்பி இருந்தார்கள். இது குறித்து பல சர்ச்சைகள் எழுந்து இருந்தது. மேலும், அமைச்சர் சுப்பிரமணியம் இது குறித்து பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவது குறித்த சர்ச்சை அதிகமாகத்தான் இருக்கிறது. நயன்தாரா – விக்னேஷ் சிவன் வாடகை தாய் மூலம் பெற்றிருக்கும் குழந்தை விதிமுறைக்குட்பட்டதா? இல்லையா? என்பதை DMS மருத்துவத் துறையினர் மூலம் பரிசீலனை செய்யப்படுகிறது.

nayan

மருத்துவக்குழு சோதனை:

-விளம்பரம்-

அவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு தான் குழந்தை பெற்றிருக்கிறார்களா? இல்லையா? என்பதை பரிசீலனை செய்த பிறகு தான் தெரியும். அதற்காக மருத்தவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குநர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருக்கிறது என்று கூறி இருந்தார். அதன்படி மருத்துவ குழுவும் விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் இது குறித்து பாஜக துணை தலைவர் துரைசாமி விமர்சித்திருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

-விளம்பரம்-

துரைசாமி அளித்த பேட்டி:

சமீபத்தில் பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜகவின் மாநில துணைத்தலைவர் துரைசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று இருந்தது. அதில் தாய் மொழியான தமிழுக்கு முடிவுரை எழுத திமுக முயற்சிப்பதாக குற்றம் சாட்டி பேசி இருந்தார். பின் வி பி துரைசாமி கூறியிருந்தது, கோவை குண்டுவெடிப்பு குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தாமல் நயன்தாராவுக்கு 4 மாதத்தில் இரட்டை குழந்தை எப்படி பிறக்கும்? என ஆராய குழு அமைத்திருந்தார்கள். நயன்தாராவுக்கு எத்தனை குழந்தை பிறந்தால் நமக்கு என்ன? நயன்தாரா கணவர் ஒரு மாபெரும் தியாகி.

நயன்தாரா குழந்தை குறித்து கூறியது:

நயன்தாராவுக்கு குழந்தை பிறந்தது குறித்து அவர் அமைதியாக இருக்கிறார். ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருந்தவருக்கு மந்திரி பதவி கொடுத்து அமைச்சர் ஆக்கினால் அவர் நயன்தாராவுக்கு பிறந்த குழந்தை குறித்து குழு அமைத்து விசாரித்து இருக்கிறார். இதனால் தமிழ்நாட்டுக்கு என்ன? நயன்தாரா குழந்தை மீது இருக்கும் அக்கரை தமிழ்நாடு அரசுக்கு கோவை குண்டு வெடிப்பு மீது இல்லையா? விக்னேஷ் சிவன் லால்குடி யாம். அவன் நம்ம ஏரியா பையன் தான் போல. நல்லா இருக்கட்டும். அவர் மீது எனக்கு பொறாமை எல்லாம் இல்லை என்று துரைசாமி அரசாங்கத்தை விமர்சித்து பேசியிருந்தார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news