கழுவேத்தி மூர்க்கன் படம் ஜாதி, மத வாதிகள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டி இருக்கிறது என்று திருமாவளவன் அளித்திருக்கும் பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அருள்நிதி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது அருள்நிதி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கழுவேத்தி மூர்க்கன். இந்த படத்தில் தூஷாரா விஜயன், சந்தோஷ் பிரதாப், முனிஷ்காந்த் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஒலிம்பியா மூவிஸ் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. இந்த படத்தை சை கெளதம ராஜ் இயக்கியிருக்கிறார்.

படத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தெக்குப்பட்டி கிராமத்தில் மேல தெருவில் அருள்நிதி வசிக்கிறார். கீழே தெருவில் சந்தோஷ் பிரதாப் வசிக்கிறார். இருவருமே சிறுவயதிலிருந்து நல்ல நண்பர்கள். இன்னொரு இவர்களின் ஊர் மத்தியில் ஜாதி போராட்டம் நடக்கிறது. ஒரு நாள் பொதுக்கூட்டம் பேனர் ஒன்றை சந்தோஷ் பிரதாப் கிழித்திருக்கிறார். இதனால் ராஜசிம்மனுக்கு மாவட்ட செயலாளர் பதவி பறிபோகிறது. அடுத்த சில நாட்களிலேயே சந்தோஷ் பிரதாப் கொலை செய்யப்படுகிறார். ஆனால், இந்த பழி அருள்நிதி மீது விழுகிறது. இதிலிருந்து அருள்நிதி தப்பி ஓடுகிறார். இறுதியில் சந்தோஷை கொன்றது யார்? அருள்நிதி பழிக்கு பழி வாங்கினாரா? அடுத்து என்ன நடக்கிறது? என்பது தான் படத்தின் மீதி கதை.

Advertisement

கழுவேத்தி மூர்க்கன் படம்:

மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை கூறியிருந்தார்கள். இந்த நிலையில் இந்த படத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள ப்ரிவியூ திரையரங்கில் பார்த்திருக்கிறார். இதை அடுத்து இவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், தமிழகத்தில் மட்டும் இல்லை. இந்தியாவிற்கே தேவையான திரைச்சித்திரம் தான் கழுவேத்தி முருகன் படம். அனைத்திந்திய மொழிகளிலும் இந்த படம் மொழிபெயர்க்கப்பட வேண்டிய திரைப்படம்.

திருமாவளவன் அளித்த பேட்டி:

இந்த படத்தில் கதாபாத்திரத்தையும் வசனத்தையும் இயக்குனர் கொடுத்து இருக்கிறார். வசனங்கள் ஒவ்வொன்றும் காரசாரமாக தெறிக்க விட்டிருக்கிறது. படத்தில் யாரையும் எந்த சமூகத்தையும் காயப்படுத்த வில்லை. இன்றைய இளைஞர்கள் ஜாதி என்ற கட்டமைப்பில் இருந்து வெளியே வர வேண்டும் என்ற நோக்கில் இந்த கதையை இயக்குனர் கொடுத்திருக்கிறார். ஜாதியை கடந்து நட்பு உருவாக வேண்டும், அது வலுவாக இருக்க வேண்டும் என்பதை இந்த படத்தில் தெள்ளத் தெளிவாக கூறியிருக்கிறார் .

Advertisement

நட்பு குறித்து சொன்னது:

மேலும், இந்த படத்தில் நண்பர்களாக வரும் இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் ஒட்டுமொத்த சமூகத்துக்கே வழிகாட்டும் வகையில் இயக்குனர் கற்பித்து இருக்கிறார். படத்தில் அருள்நிதி நடிப்பு அபாரமாக இருக்கிறது. ஜாதிகளுக்கு இடையே பெரிய அளவில் ஏற்படும் மோதல்கள் வெடிப்பதற்கு அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல் அதிகார வர்க்கத்தின் அணுகுமுறையும் காரணமாக இருக்கிறது என்பதை படத்தில் கூறியிருக்கிறார்.

Advertisement

அரசியல்வாதிகள் குறித்து சொன்னது:

மேலும், ஜாதியினால் நட்பை முடித்துக் கொள்ளக் கூடாது, ஜாதி என்றவுடன் காதலை தூக்கி எறிந்து விடக்கூடாது என்பதை படத்தில் இயக்குனர் அழகாக காண்பித்திருக்கிறார். ஜாதியை கடந்து மொழியை கடந்து காதல் வரவேண்டும் என்பதையும் சிறப்பாக கூறியிருக்கிறார். பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்ற வள்ளுவனின் வாக்கு உயர்வானது என்பதை இயக்குனர் உறுதிப்படுத்தி இருக்கிறார். ஜாதியவாதிகளுக்கு மதவாதிகளுக்கு அரசியல்வாதிகளுக்கு அதிகார வெறி பிடித்தவர்களுக்கு பாடம் புகட்டக்கூடிய ஒரு திரைப்படமாக கழுவேத்தி மூர்க்கன் இருக்கிறது.

Advertisement