அஜித்துக்கு ஸ்டார் வேல்யூவை உருவாக்கியதே சக்ரவர்த்தி சார் தான் – முகவரி இயக்குனர்

0
342
Ajith
- Advertisement -

எஸ் எஸ் சக்கரவர்த்தியின் மறைவு குறித்து முகவரி பட இயக்குனர் V.Z.துரை அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியாலும் கடின உழைப்பாலும் இந்த இடத்தை அடைந்திருக்கிறார். அஜித்தின் வளர்ச்சிக்கு ஒரு பக்கம் உறுதுணையாக அமைந்தது பிரபல தயாரிப்பு நிறுவனமான நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தான். 1997ஆம் ஆண்டு வெளியான ராசி படத்தை தயாரித்தார் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி. இது தான் நிக் ஆர்ட்ஸ் பேனரில் அஜித் நடித்த முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

இந்த படத்தை தொடர்ந்து வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜீ, வரலாறு என்று அஜித்தின் பல்வேறு திரைப்படங்களை நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக எஸ்.எஸ்.சக்ரவர்த்தி தயாரித்துள்ளார். அஜித் மற்றும் எஸ் எஸ் சக்கரவர்த்தி கூட்டணியில் உருவான பல திரைப்படங்கள் மாபெரும் ஹிட் அடித்தது. ஆனால், இடையில் எஸ் எஸ் சக்கரவர்த்தியுடன் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக நிக் ஆர்ட்ஸ் பேனரில் பணியாற்றுவதை நிறுத்தினார் அஜித். இறுதியாக 2006 ஆம் ஆண்டு வெளியான வரலாறு படம் தான் அஜித் நடித்த கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

எஸ் எஸ் சக்கரவர்த்தி மரணம்:

அஜித்தை பிரிந்த பின்னர் எஸ் எஸ் சக்கரவர்த்தி சிம்புவை வைத்து காளை படத்தை வெளியிட்டு இருந்தார். இதனைத் தொடர்ந்து ரேணிகுண்டா, 18 வயசு, வாலு போன்ற படங்களை தயாரித்தார். 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் எந்தபடத்தையும் தயாரிக்காமல் இருந்த எஸ் எஸ் சக்கரவர்த்தி இறுதியாக விமல் நடிப்பில் வெளியாகிய மாபெரும் பிட் அடித்த விலங்கு வெப்சீரியஸ்ஸை தயாரித்து இருந்தார். அண்மையில் இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக இவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சென்னையில் உயிரிழந்துள்ளார்.

இயக்குனர் V.Z.துரை அளித்த பேட்டி:

இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் எஸ் எஸ் சக்கரவர்த்தியின் மறைவை குறித்து முகவரி படத்தின் இயக்குனர் V.Z.துரை அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர், சக்கரவர்த்தி சார் ரொம்ப நல்ல மனிதர். அப்போது யாரிடமாவது உதவி இயக்குனராக இருந்தால் தான் தயாரிப்பாளர்கள் அவர்களுக்கு முதல் படம் கொடுப்பார்கள். ஆனால், நான் அப்போது தான் முதுகலை படித்தேன். உதவி இயக்குனராக இல்லை. ஆனால், சக்கரவர்த்தி சார் என் மீது இருந்த நம்பிக்கையின் காரணமாக முகவரி பட வாய்ப்பு எனக்கு கொடுத்தார்.

-விளம்பரம்-

சக்கரவர்த்தி குறித்து சொன்னது:

எனக்கு அவர் தயாரிப்பாளர் மட்டுமல்ல குருவும் தான். முதல் நாள் படப்பிடிப்புக்கு முன்னால் இருந்து எடிட்டிங் வரை எல்லாத்துக்கும் அவர் எனக்கு உறுதுணையாக இருந்தார். அதுபோல அஜித் சாரும் அவருக்கும் இடையேயான நட்பு ரொம்ப அழகானது. ஒருவருக்கொருவர் அவ்வளவு புரிதல்களுடன் இருப்பார்கள். சக்கரவர்த்தி சார் சொல்ற விஷயத்தை அஜித் சார் அப்படியே கேட்பார். சாதாரண ஹீரோவாக இருந்த அஜித் சார் ஸ்டார் வேல்யூவாக உருவாக்கியவர் சக்கரவர்த்தி சார் தான்.

அதைப்போல சக்கரவர்த்தி சார் கேட்ட தேதிகளில் எல்லாம் அஜித் சாரும் வந்து நடித்துக் கொடுப்பார். இவரால் அவரும் அவரால் இவரும் சேர்ந்து ஜெயித்தார்கள் என்று தான் சொல்லலாம். சக்கரவர்த்தி சார் ஒரு கட்டத்தில் தயாரிப்பிலிருந்து ஒதுங்கியது தமிழ் திரைக்கு பெரிய இழப்பு. படத்தை தாண்டி அவருடைய வீட்டு விசேஷங்களுக்கும் அவர் அழைப்பு கொடுப்பார். அடிக்கடி அவர் என்னுடன் பேசுவார். என்னை பொருத்தவரை ஒரு தயாரிப்பாளர் மட்டுமில்லாமல் ஒரு குருவையும் நான் இழந்து இருக்கிறேன் என்று கண்கலங்கி கூறியிருக்கிறார்.

Advertisement