கடந்த மாதம் தி.மு.க. தலைவர் கலைஞர் இறந்தார் என்ற செய்தி வெளிவந்ததும் மொத்த தமிழகமும் சோகத்தில் ஆழ்ந்தது. அவரது மறைவினை அடுத்து தமிழக அரசு அந்த நாளை துக்க தினமாக அனுசரித்தது. இந்நிலையில்,மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் வாழ்க்கையை தழுவிய படம் யாரேனும் எடுக்க நினைத்தாள் அதில், கண்டிப்பாக நான் நடித்து தருகிறேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.
இதுகுறித்து பிரகாஷ்ராஜ் கூறியது: நான் கருணாநிதி அவர்களின் மிகப்பெரிய ரசிகன். அவரை நீண்ட நாட்களாக தெரியும் அவருடைய மறைவு என்னையும் பெரிதாக காயப்படுத்தியது. அவரை போன்று என்னால் 90 ஆண்டுகளுக்கு மேலாக வாழ முடியாது. எனவே திரையில் ஆவது அவரை போன்று நான் வாழ ஆசைப்படுகிறேன்.
எனவே, கலைஞர் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் எடுக்க நினைத்தால் கண்டிப்பாக அதில் நான் கலைஞராக நடிக்க தயாராக உள்ளேன். அவருடைய வாழ்க்கை அவர் தமிழ் மக்கள் மீதும், தமிழின் மீதும் வாய்த்த அன்பு என்பது மிகவும் அதிகம் என கருதுகிறேன்.
எனவே, அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் என்னிடம் கூறுங்கள். நிச்சயம் அதை ஏற்று கருணாநிதியாக நடிக்க ஆசைப்படுகிறேன் என்று மிகவும் உருக்கமாக பேட்டி அளித்தார். பிரகாஷ்ராஜ்