சேலை கட்டி நடிச்சாலும், சேலை கட்டி சேத்துல குதிச்சாலும் கிளாமராதான் தெரியும். சீரியல் நடிகை

0
1853

மெட்டி ஒலி’ சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர் கிருத்திகா. சின்னத்திரையில் 12 வருடங்களாக பாசிட்டிவ், நெகட்டிவ் என ரெண்டு கதாபாத்திரங்களிலும் வெளுத்து வாங்கும் அவரது நடிப்புக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். அவரிடம் பேசத் தொடங்குவதற்கு முன்னர், குட்டி பயோ.

krithika

கிராமத்தில் ஒருநாள்’ நிகழ்ச்சி ரொம்ப கிளாமரான நிகழ்ச்சியா இருக்கும்னு பேசப்படுதே…”
“அந்த ஷோவில் நிறைய கஷ்டமான டாஸ்க் இருக்கும். அது முழுக்க முழுக்க கோயம்புத்தூருக்குப் பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் நடக்கும். ஒவ்வொரு டாஸ்க்கும் ரொம்பவே வித்தியாசமா இருக்கும். பயங்கர ரிஸ்க் எடுத்துதான் விளையாடறோம். சேற்றில் விழும் டாஸ்கில் எல்லாம் பக்காவா டிரெஸ் போட்டு பண்ண முடியாது. கம்ஃபர்டபிளா இருக்குற டிரெஸ் போட்டுக்கிறாங்க.

ஜீன்ஸ், குர்தி என எனக்கு கம்ஃபர்டபிளான டிரெஸை நான் போட்டுக்கிறேன். கேமரா ஆங்கிள் காட்டும் விதம், பார்க்கிறவங்களுக்குக் கிளாமரா தெரியுது. அதுக்கு நாங்க எதுவும் பண்ண முடியாது. சேலை கட்டி நாடகத்துல நடிச்சாலும், அதையும் கிளாமரா பார்க்கிறவங்க இருக்கத்தான் செய்றாங்க. ஜீன்ஸ், குர்த்தி இல்லாம நான் சேலை கட்டி சேத்துல குதிச்சாலும் அது கிளாமராதான் தெரியும்.”

actress krithika

“உங்க காஸ்டியூம் செலக்‌ஷன்ஸ் பற்றிச் சொல்லுங்களேன்…”

“ `சின்னதம்பி’ சீரியலில் மார்டனா டிரெஸ் பண்ணுவேன். அதனால், 70,000 ரூபாய்க்கு டிரெஸ் எடுத்திருக்கேன். ஒரு சீரியலில் பயன்படுத்தின காஸ்டியூமை இன்னொரு சீரியலுக்குப் பயன்படுத்த மாட்டேன். நான் கொஞ்சம் உயரமா இருக்கிறதால், பெரும்பாலும் குர்தி டிரை பண்ணுவேன். பிளைன் சேலை, காட்டன் சேலை, பூனம் சேலைன்னு ஒவ்வொரு சீரியலுக்கும் ஒவ்வொரு பேட்டர்ன் தயார் பண்ணிட்டு, ஃபாலோ பண்ணுவேன்.