ஆனால், அதற்கு முன்பாகவே இயக்குனர் ஏ எல் விஜய், இசையமைப்பாளரும் நடிகருமான ஜி வி பிரகாஷை வைத்து படம் ஒன்றை இயக்கப்போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் அந்த படத்திற்கான வேலைகளை விரைவில் துவங்க இருக்கிறார் இயக்குனர் விஜய். மேலும் , இயக்குனர் ஏ எல் விஜய் - ஜி வி பிரகாஷ் கூட்டணியில் உருவாக2 இருக்கும் இந்த படத்திற்கு "வாட்ச்மேன்" என்று தலைப்பை வைத்திள்ளனர். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களின் விவரம் இன்னும் வெளிவரவில்லை. விரைவில் "வாட்ச்மேன்" படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான பெரும்பாலான அனைத்து படங்களுக்கும் ஜி வி பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார். மேலும், ஏ எல் விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான "தலைவா " படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் மூலம் தான் முதன் முதலில் கேமரா முன்பு தோன்றி இருந்தார் இசையமைபாளர் ஜி வி பிரகாஷ் என்பது குறிப்பிடதக்கது.This blockbuster musical combo's next film is titled #Watchman. @gvprakash #ALVijay. pic.twitter.com/1e1HD4EjwT
— First Look Cinema (@firstlookcinema) August 28, 2018





