இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு பல்வேறு வேடங்கள் இருப்பதால் ஹாலிவுட் மேக்கப் மேன்களை கொண்டு மேக்கப் போடப்பட்டது. இந்த முயற்சியை ரசிகர்கள் பாராட்டினர்.இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் ,பார்வதி மற்றும் காயத்ரி நடிக்கவுள்ளனர்.
மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அர்ச்சனா என்பவர் தான் நடிப்பதாக இயக்குனர் பாலாஜி தரணிதரன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். நடிகை அர்ச்சனா’ வீடு ‘ படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் டிசம்பர் 20 ஆம் தேதி இந்த படம் திரைக்கு வரவிருக்கும் நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி உருவத்தின் மெழுகு சிலையை சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவன்யூவில் வைக்க உள்ளனர். இந்த சிலையை நாளை மாலை 6 மணிக்கு பிரபல இயக்குனர் மஹேந்திரன் திறக்கவுள்ளார்.சினிமாReading time · 1 min





