“நாங்கள் அனைத்து மத நம்பிக்கைகளையும் ஏற்கிறோம். திமுக தலைவர்களின் கருத்தை நாங்கள் ஏற்கவில்லை” -காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பவன் கெரா.

0
1083
- Advertisement -

சனாதனம் குறித்து திமுகவின் கருத்தை நாங்கள் ஏற்கவில்லை காங்கிரஸ் கட்சி விளக்கம். நாங்கள் அனைத்து மதங்களின் நம்பிக்கைகளையும் மதிக்கின்றோம் காங்கிரஸ் கட்சி. நாடாளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் வட்டாரங்கள் மிகவும் பரப்பரப்பாக இருந்து வருகிறது. இதில் ஒரு தரப்பினர் அவர்களுடைய கருத்து கூற அதற்க்கு எதிரணியில் இருப்பவர் மற்றொரு கருத்தை கூற என பரபரப்பாக இருந்து வருகிறது. இந்த நிலையில் திமுகவின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் தர்மாவை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார்.

-விளம்பரம்-

உதயநிதி பேசியது:

சிலவற்றை நாம் எதிர்க்க கூடாது கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா அதை எல்லாம் ஒழிக்க தான் வேண்டும் அது போல தான் இந்த சனாதனமும். சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியமாகும். சனாதனம் என்றால் என்ன அதன் பெயரே சமஸ்கிருததில் இருந்து வந்தது தான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனத்திற்கு அர்த்தம் என்னவென்றால் நிலையானது மாற்றமுடியாதது, யாரும் கேள்வி கேட்க்க முடியாது என்று அர்த்தம்.

- Advertisement -

மருத்துவ கட்டமைப்பில் இந்தியாவிற்கே முன் மாதிரியாக இருந்து வருகிறோம். இது வரை இந்தியாவில் உள்ள சிறந்த மருத்துவர்களை உருவாக்கியது தான் தமிழ்நாடு. ஆனால் அதை சிதைக்கவேண்டும் என்று கொண்டு வந்தது தான் நீட் தேர்வு. சிலருக்கு நிச்சயம் வயிற்று எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும்.

இந்த மாநாடுகளை தொடர்ந்து நடத்த வேண்டும் இங்கு பேசிவிட்டு அனைவரும் கலைந்து விடக் கூடாது. இங்கு பேசிய கருத்துகளை பொது மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். என்றும் அமைச்சர் உதயநிதி கூறியிருந்தார். அது சர்ச்சை ஆன நிலையில் பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் வெற்றி மாறன் ரஞ்சித் உதயநிதிக்கு ஆதரவு தந்த நிலையில் தற்போது நடிகர் கமலஹாசனும் அவர்களுக்கு ஆதரவு தந்து பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

திமுகவின் கருத்தை மறுத்த காங்கிரஸ்:

எங்களைப் பொறுத்தவரை அனைத்து மத நம்பிக்கையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எந்த ஒரு மத நம்பிக்கை பற்றி மவுதறாக பேசக்கூடாது இது போன்ற இந்திய அரசமைப்பு சாசனத்தை நாங்கள் ஏற்கவில்லை. சனாதானா தர்மத்தை ஒழிப்போம் என்று உதயநிதி ஸ்டாலின்  பேசியதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஒருவர் கூறிய கருத்தைத் திரித்து கூற வேண்டும் என்று பிரதமர் மோடி நினைத்தால் தாராளமாக பேசலாம். இந்திய கூட்டணிகள் அனைத்து கட்சிகளும்  அனைத்து மதங்களையும் மற்றும் நம்பிக்கைகளையும் மதிக்கின்றது. ராகுல் காந்தியின் பாத ஒற்றுமையா திரு மூலம் மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்தி வலுப்படுத்தி உள்ளோம்.

ஆனால் சில சக்திகள் இந்தியாவில் ஒற்றுமை பிரிக்க பார்க்கின்றன அது யார் என்று உங்களுக்கு தெரியும். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் இந்தியாவை ஒற்றுமையை வளர்த்து வருகிறோம். இந்திய நாட்டின் பிரிவினையை தூண்டும் மிகப்பெரிய சக்திக்களோடு நாங்கள் போராடிக் கொண்டு வருகிறோம். இந்தியா பாரத் என்ற பெயரில் இரண்டுமே ஒன்றுதான் ஆனால் இதனை பயன்படுத்தி பாஜக அரசு விழுப்புரத்தை ஏற்படுத்த முயல்கிறது. ஆங்கிலத்தில் கோல்ட் என்றாலும் ஹிந்தியில் சோனா என்று கூறினாலும் அதன் ஒரே அர்த்தம்  ஒன்றுதான் விளையும் ஒன்றுதான் தரமும் ஒன்றுதான் என்று பவன் கெரா கூறினார்.

Advertisement