கராத்தே பிளாக் பெல்ட்.! புல்லட் ரைடர்..! விதவிதமா சாப்பிடுறது..! பிக் பாஸ் போட்டியாளர் யார் தெரியுமா..?

0
5450
Yashika-anandh

கவலை வேண்டாம்’, `துருவங்கள் பதினாறு’ படங்களில் நடித்திருந்தாலும், `இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படத்தின் சர்ச்சையால் பரவலாகப் பேசப்பட்ட நடிகை யாஷிகா ஆனந்த். தற்போது பிக் பாஸ்-2 நிகழ்ச்சியில் போட்டியாளர். இவரைப் பற்றிய மேலும் பல தகவல்களுக்கு யாஷிகாவின் அம்மா சோனல் ஆனந்தை தொடர்புகொண்டு பேசினோம்.

yashika anand

- Advertisement -

எப்போதுல இருந்து யாஷிகாவுக்கு நடிப்புல ஆர்வம் வந்தது?
எல்லாக் குழந்தைகளும் அழுதுகிட்டேதான் பிறக்கும். ஆனா, யாஷிகா சிரிச்சுக்கிட்டே பிறந்ததுனால, `She is an extraordinary child’னு டாக்டர்ஸ் சொன்னாங்க. ஸ்கூல்ல பயங்கரமா சேட்டை பண்ணுவா. நல்ல டான்ஸர். மிமிக்ரியிலேயும் ஆர்வம் இருக்கு. ஏழாம் வகுப்புப் படிக்கும்போதே `ஏக்தா கபூர்’ தயாரிப்பு நிறுவனத்துல ஆக்டிங் கோர்ஸ் பண்ணா. தமிழ்ல கூத்துப்பட்டறையிலேயும் நடிப்புப் பயிற்சி எடுத்துக்கிட்டா. `நான் டிவியில தெரியணும். நடிகை ஆகணும். கஷ்டப்படுறவங்களுக்கு உதவி பண்ணணும்’னுதான் எப்போவும் சொல்லிக்கிட்டே இருப்பா. தவிர, ஸ்கூல் படிக்கும்போதே பல ஏழை குழந்தைகளுக்கு உதவி பண்ண ஆரம்பிச்சுட்டா. ரொம்ப காலம் நிறைய படங்கள், விளம்பரங்கள்ல சின்ன சின்ன ரோல் பண்ணிக்கிட்டிருந்தா. `நாம ஒருநாள் பெரியாளா வருவோம்’னு அவளுக்கு நம்பிக்கை இருந்துச்சு. அந்தப் பொறுமையும், தைரியமும்தான் யாஷிகாவை இந்த அளவுக்குக் கொண்டுவந்து நிறுத்தியிருக்குனு நினைக்கிறேன்.

பொண்ணு கிளாமரா நடிக்கிறதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?

-விளம்பரம்-

கிளாமரா நடிக்கிறதுல எனக்கும் அவங்க அப்பாவுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. சின்ன வயசுல இருந்தே என் பொண்ணு ஓப்பன் டைப். எல்லா விஷயத்தையும் எங்ககிட்ட பேசுவா. அளவுக்கு மீறிய மெச்சூரிட்டி அவகிட்ட இருக்கு. அதனால, நானும் அவரும் யாஷிகாவை ஒரு குறுகிய வட்டத்துக்குள்ள அடைக்க விரும்பலை. அவளுக்கு புல்லட் வண்டி ஓட்டக் கத்துக்கொடுத்தது, கராத்தே கிளாஸுக்கு அனுப்பியதெல்லாம் அவங்க அப்பாதான். யாஷிகா கராத்தே பிளாக் பெல்ட் சாம்பியன்.

yashika parents

வீட்டுல யாஷிகா எப்படி? `பிக் பாஸ்’ வீட்டுக்குள்ள அவங்க எப்படி இருப்பாங்கனு நினைக்கிறீங்க?

மொபைல் இல்லாம ஒரு நிமிடம்கூட யாஷிகாவால இருக்கமுடியாது. குளிக்கும்போதுகூட போன்ல பாட்டு கேட்குற பழக்கம் இருக்கு. சமூக வலைதளங்கள்ல ரொம்ப ஆக்டிவ். விதவிதமான உணவுகள் சாப்பிடுறது, அடிக்கடி டூர் போறது யாஷியாவுக்கு ரொம்பப் பிடிக்கும். வீட்டு வேலைகள் எதையும் அவ பார்த்ததேயில்லை. பிக் பாஸ் வாய்ப்பு வந்ததும், `நீ எப்படி வீட்டு வேலைகளையெல்லாம் பண்ணப்போற?’னுதான் கேட்டேன். `நான் எல்லாத்தையும் சமாளிப்பேன்மா’னு சொன்னா!” என்கிறார், யாஷிகாவின் அம்மா சோனல் ஆனந்த்.

Advertisement