கையில் அந்த டாட்டூவை பார்த்துவிட்டு இதை தான் சொன்னார் – விஜய் டிவி சீரியல் நடிகர் பேட்டி.

0
1590
ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் பற்றி நாம் அனைவருமே அறிவோம். சாதாரண ரசிகர்களை போன்று இவருக்கு திரைத்துறையிலும் பல்வேறு பிரபலங்கள் ரசிகராக இருந்து வருகிறார்கள். அவ்வளவு ஏன் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு கூட அஜித்தின் தீவிர ரசிகர் தான். பெரும்பாலும் அஜித்தின் மீதுள்ள அன்பினால் ரசிகர்கள் சிலர் அஜித்தின் பெயரை கையில் பச்சை குத்திக் கொண்டுள்ள கதைகளை நாம் பல கேட்டுள்ளோம்.

-விளம்பரம்-

ஆனால் சினிமா நடிகரும் சீரியல் நடிகருமான ஜெமினி கூட அஜித்தின் மீதுள்ள அன்பினால் அஜித்தின் பட பெயரை கையில் பச்சை குத்திக் கொண்டிருக்கிறார் என்பது பலரும் அறிந்திராத ஒரு விஷயம். நடிகர் ஜெமினி தமிழில் வெளியான குள்ளநரி கூட்டம் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் நடித்திருக்கிறார். மேலும் ஈரமான ரோஜாவே சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஜெமினி.

- Advertisement -

மேலும் இவர் அஜித்தின் தீவிர ரசிகரும் கூட, இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள ஜெமினி அஜித்தின் பட தனது பெயருடன் சேர்த்து பச்சை குத்தி உள்ளதை பார்த்து அஜித் அளித்த அறிவுரை குறித்து கூறியிருக்கிறார். அந்த பேட்டியில் பேசியுள்ள ஜெமினி, கிரீடம் படத்தின் போது நான் அஜித்துடன் பணியாற்றி இருக்கிறேன். ஒருசமயம் விழியில் உன் விழியில் பாடலின் படப்பிடிப்பிற்காக விசாகப்பட்டினம் சென்று இருந்தோம். அப்போது என்னுடைய கையில் தீனா மணி என்ற டாட்டூ இருப்பதை கண்டு அஜித் என்னிடம் இது என்ன? என்று கேட்டார்.

வீடியோவில் 7 நிமிடத்தில் பார்க்கவும்

அஜித்திற்கு தமிழ் படிக்கத் தெரியாது, அதனால் நான் அவரிடம் இந்த டாட்டூ குறித்து சொன்னேன். அதற்கு அவர் இந்த டாட்டூவை அழித்துவிடுங்கள் அதுவும் வலியில்லாமல் ஏதாவது மருந்துகளைப் போட்டு அழித்து விடுங்கள் என்று கூறினார். நானும் சரி என்று கூறினேன். அதன் பின்னர் என்னிடம் அவர் இது போன்று தான் பலரும் செய்கிறார்கள் இதெல்லாம் எனக்கு சுத்தமாக பிடிக்காது. நாங்களும் ஒரு சாதாரண மனிதர்கள்தான் நீங்களே திரையில் பார்த்து மகிழ்வதோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்று சொன்னார்.

-விளம்பரம்-
Advertisement