சிவகார்த்திகேயன் இயக்குனர்.! மூன்று ஹீரோ சப்ஜக்ட்.! ஹீரோ யாருனு அவர் சொல்லிட்டார்.!

0
664
sivakarthikean
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மிகவும் அபிரிவிதமானது. மேடை கலைஞ்சராக தனது வாழ்க்கையை துவங்கிய சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக திகழ்ந்து வருகிறார். நடிகராக களமிறங்கிய இவர், தற்போது பாடகராகவும், பாடல் ஆசிரியராகவும், தயரிப்பாராகவும் அவதாரமெடுத்து வந்தார்.

-விளம்பரம்-

சமீபத்தில் தனியார் யூடுயுப் சேனல் நடத்திய விருது வழங்கும் விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்த ‘கனா’ திரைப்படத்திற்காக சிறந்த அறிமுக தயாரிப்பாளர் என்ற விருது வழங்கபட்டது. இந்த விருதினை அவருக்கு விக்ரம் அளித்திருந்தார்.

- Advertisement -

அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த கிகியும் மிர்ச்சி விஜயும், சிவகார்திகேயனிடம் ஒரு வேலை நீங்கள் இயக்குனராக ஆகிவிட்டால் அதில் விக்ரம் நடிக்கிறார். அதற்கு நீங்கள் எந்த மாதிரி கதை எழுதுவீர்கள் என்று கேள்வி கேட்டனர்.

அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், விக்ரம் சாரை வைத்து படம் எடுத்தால் கண்டிப்பாக அது சிங்கிள் ஆக்ட்டாக இருக்காது. நிச்சயம் அது டபுள் அல்லது ட்ரிபிள் ஆக்ட்டாகத்தான் இருக்கும். ஏனென்றால் வேலை ஈஸியாக மாறிவிடும், ஏனெனில் சார்கிட்ட போய் மூன்று லுக் நீங்களே பிக்ஸ் பண்ணிடுங்க என்றால் அவரே பிக்ஸ் பண்ணிடுவார். கதை எங்கயாவது வேற படத்தில இருந்து எடுக்கலாம் என்று கிண்டலாக முடித்தார் சிவா.

-விளம்பரம்-

Advertisement